அமெரிக்காவின் முன்னாள் அதிபர் இருந்தவர் ஜார்ஜ் HW புஷ், உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த செவ்வாய் கிழமையன்று இவரது மனைவி பார்பரா புஷ் தனது 92-வது வயதில் இரத்த தொற்று காரணமாக மரணமடைந்தார்.


இந்நிலையில் தற்போது ஜார்ஜ் HW புஷ்(93) அவர்களும் இரத்த தொற்று காரணமாக ஹாஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுதொடர்பாக புஷ் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் ஜிம் மெக்ராத் தெரிவிக்கையில், கூடுதல் தகவலகள் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்து தற்போதைக்கு புஷ் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்துள்ளார்.
 
73 ஆண்டுகள் வழ்ந்துள்ள இத்தம்பதிக்கு 6 குழந்தைகள் உண்டு. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் W புஷ் இவர்களது புதல்வர்களில் குறிப்பிடத்தக்கவர்.