நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள உ.பி. மாநில இளம்பெண் வன்கொடுமை மற்றும், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, 12 வயதுக்கு குறைவான சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என அரசு அவசரச்சட்டம் கொண்டுவந்தது. இருப்பினும் சிறார்களுக்கு எதிரான வன்கொடுமையானது தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.


இந்நிலையில், ஆந்திர பிரதேசம் குண்டூரில் 9 வயது சிறுமியை 60 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இந்த வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் வாசிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


இது தொடர்பாக காவல் துறை கூறும்போது....!


பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் காயங்கள் உள்ளது ஆராச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.


குற்றவாளி தற்போது தலைமறைவாக உள்ளான், அவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.