#Sterlite எதிரொலி அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு!
தமிழகத்தில் நிலவி வரும் அசாதரண சூழலை கருத்தில் கொண்டு, வரும் மே 25, 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த சென்னை அண்ணா. பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது!
தமிழகத்தில் நிலவி வரும் அசாதரண சூழலை கருத்தில் கொண்டு, வரும் மே 25, 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த சென்னை அண்ணா. பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், பொதுமக்களை எதிர்த்து காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பள்ளி மாணவி ஒருவர் உள்பட 13 போ் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடா்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது. காவல் துறையின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது.
முன்னதாக இன்று தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு காவல்துறைப் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துக்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் அசாதரண சூழலை கருத்தில் கொண்டு, வரும் மே 25, 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த சென்னை அண்ணா. பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.
மேலும், வரும் 29-ஆம் தேதியிலிருந்து நடைபெற உள்ள தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். ஆனால், மே 25, 26, 28 தேதிகளில் நடைபெறவுள்ள தேர்வுகள் மட்டும் ஜூன் 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைப்பெறும் என அறிவித்துள்ளது!