பாலியல் வழக்கில் ஆசாராம்-க்கு ஆயுள் தண்டனை!
![பாலியல் வழக்கில் ஆசாராம்-க்கு ஆயுள் தண்டனை! பாலியல் வழக்கில் ஆசாராம்-க்கு ஆயுள் தண்டனை!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/04/25/129488-asaaram12.jpg?itok=X3vwuPlw)
பாலியல் வழக்கில் ஆசாராம்-க்கு ஆயுள் தண்டனையும், அவரது ஆதரவாளர்கள் சில்பி மற்றும் ஷாரட்-க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி தீர்பளிக்கப்பட்டுள்ளது
பாலியல் வழக்கில் ஆசாராம்-க்கு ஆயுள் தண்டனையும், அவரது ஆதரவாளர்கள் சில்பி மற்றும் ஷாரட்-க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி தீர்பளிக்கப்பட்டுள்ளது
ராஜஸ்தான், குஜராத் என பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு. இவல் தனது ஆசிரமத்தில் தங்கி பயின்று வந்த ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சகோதரிகனள் இருவரை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியதாக கடந்த 31.08.2013 அன்று கைது செய்யப்பட்டார்.
வன்புணர்ச்சி மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்கார தடை சட்டத்தின்கீழ் ஆசாராம் பாபு மீது வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாராணையில் இவர் மேலும் பல சிறுமிகளை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்தது.
ராஜஸ்தான மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரின் மீதான இவ்வழக்கில் கடந்த ஐந்து மாதங்களாக விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 25) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி மதுசூதன் ஷர்மா தெரிவித்து இருந்தார்.
இவ்வழக்கீன் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கு தொடுத்த பெண்னின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதேப்போல் அசம்பாவிதங்கள் ஏதும் நடைப்பெறாமல் இருக்க நீதிமன்ற வளாகாத்தைச் சுற்றிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை பாலியல் வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி என தீர்ப்பு வெளியானது. பின்னர் தீர்பின் விவரம் மாலை 3 மணியளவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி தீர்ப்பின் விவரம் வெளியாகியுள்ளது... இந்த வழக்கில் ஆசாராம்-க்கு ஆயுள் தண்டனையும், அவரது ஆதரவாளர்கள் சில்பி மற்றும் ஷாரட்-க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி தீர்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு தொடர்பாக ஆசாராம் வழக்கறிஞர் தெரிவிக்கையில், தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்!