கடந்த 5-ம் தேதி மும்பையில், வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கங்களுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவராத்தையில், வருவாய் அடிப்படையில் ஊழியர்களுக்கு சராசரியாக 2% அளவிற்கு ஊதிய உயர்வு வழங்க அரசு முன் வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இந்த ஊதிய உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கி ஊழியர்கள் மற்ற பல அரசு துறைகளை ஒப்பிடுகையில் தங்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.


மேலும் ஊதிய உயர்வினை வருவாய் அடிப்படையினில் உயர்த்தாமல், வேலைசுமையின் அடிப்படையில் உயர்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.


இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 48 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.


அதன்படி நேற்று மற்றும் இன்று நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்களுடன் தனியார் மற்றும் பன்னாட்டு வங்கி ஊழியர்கள் இணைந்து வேலை நிறுத்தத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் ரூ.20000 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் பாத்தித்துள்ளதாக வர்த்தக நிறுவனம் Assocham தெரிவித்துள்ளது.


மேலும் இன்றும் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால் மேலும் பணவரத்தனை பாதிக்கக்கூடும். அதே நேரத்தில் பல ஏ.டி.எம். இயந்தரங்களில் பணம் நிரப்பாமல் உள்ளதால் ஏ.டி.எம். சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.