பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய கதைகள், மக்களை நல்வழிபடுத்தும் நோக்கில் அமைந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய நாளில் எப்பொழுதும் எச்சரிக்கையாய் இருங்கள், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்தால் தோல்வியே கிடைக்கும் என்னும் வசனம் இடம் பெற்றுள்ள செய்திகளை பற்றி பார்போம்!!


ஒரு திருமண விழாவுக்கு மணமகனை வரவேற்க, பத்து தோழிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்தப் பத்துத் தோழிகளும் விளக்குகளுடன் வந்தார்கள். வந்த தோழிகளில் ஐந்து பேர் மட்டும் விளக்குகளை எரிப்பதற்குத் தேவையான அளவுக்கு அவர்கள் எண்ணெய் எடுத்து வரவில்லை.


வழியில் எங்கேயாவது கடை இருந்தால் வாங்கிக்கொள்ளலாம் அல்லது திருமண வீட்டாரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவர்கள் புறப்பட்டு வந்திருந்தார்கள். ஆனால், அவர்கள் வரும் வழியில் எண்ணெய் எங்கும் கிடைக்காததல் மனம் சேர்வுற்று மணமகன் வீட்டை வந்தடைந்தார்கள். எனினும், மணமகன் வருகைக்கு போதுமான அளவு எண்ணெய் இருப்பதாக நம்பிக்கையில் இருந்தனர். 


மணமகன் வெளியூர்க்காரர் என்பதால், அவர் வருவதற்கு சற்று  தாமதமானது. இரவு நீண்டநேரமாகியும் அவர் வராததால், எல்லோரும் ஆங்காங்கே படுத்து உறங்கிவிட்டார்கள். நள்ளிரவில் திடீரென மணமகன் வரும் சத்தம் கேட்டவுடன் அவரை வரவேற்க கையில் விளக்குடன் அனைவரும் தயாராகி, விளக்குகளைக் கொளுத்தினார்கள்.


அப்போது, அவர்களில் ஐந்து பேரின் விளக்குகள் மட்டுமே எரிந்தன. எண்ணெய் எடுத்து வராத தோழிகளின் விளக்குகள் சிறிதுநேரத்தில் அணையத் தொடங்கிவிட்டன. இதைக் கண்டு பதற்றமடைந்த அந்தத் தோழிகள், மற்ற ஐந்து தோழிகளிடமும் கொஞ்சம் எண்ணெய் கேட்டார்கள். அதற்கு அந்த தோழிகள் எங்கள் விளக்குகளை எரியூட்டுவதற்கு மட்டும்தான் எங்களிடம் எண்ணெய் உள்ளது என்று சொன்னார்கள்.


இதனால் பதற்றத்தின் உச்சத்துக்குச் சென்ற அந்த ஐந்து பெண்களும் எங்கேயாவது எண்ணெய் கிடைக்குமா என்று அங்குமிங்குமாகத் தேடி ஓடினார்கள்.ங்களது விளக்குகள் அணைகின்றன. 


மணமகன் வந்ததும், விளக்கை எரியூட்டியிருந்த அந்த ஐந்து தோழிகள் மட்டும் மணமகனை வரவேற்று திருமண மண்டபத்துக்குள் நுழைந்தனர். மற்ற  ஐந்து தோழிகளும் திருமண மண்டபத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. 


இதன் மூலம் இயேசு கிறிஸ்து தனது சீசர்களுக்கு கூறிய உவமை என்னவென்றால்..!


பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லப்படும் எந்த ஒரு விஷயமும் தோல்வியில்தான் முடியும். ஆகவே, இப்போதே நீங்கள் செல்லக்கூடிய தவறான வழிகளை விட்டு விலகி விவேகமான வழிகளில் செல்லுங்கள் என்றார்.


விழிப்போடு இருங்கள். உங்கள் தலைவன் எப்போது வேண்டுமானாலும், எந்த ஜாமத்தில் வேண்டுமானாலும் உங்கள் வீட்டை வந்தடையலாம். எனவே விழிப்போடு இருங்கள். தலைவன் வரும்போது விழிப்போடு இருக்கும் ஊழியனே பேறு பெற்றவன், அவனுக்கே தலைவனின் சலுகைகள் கிடைக்கும். விழிப்போடு இருந்தால், வீட்டைக் காத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் இழப்பீர்கள்' என்றார்.