பாட்னா: பிஹார் மாநிலத்தில் போட்டி தேர்வு எழுத சென்ற மானவிகளின் ஆடைகளை பொதுமக்கள் மத்தியில் ஆசிரியர்கள் கத்தரித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஹார் மாநிலம் முஷாபர் மாவட்டத்தில் (BCECEB) போட்டித் தேர்வில் பங்கேற்க சென்ற மாணவிகளின் மேல்சட்டை கையினை ஆசிரியர்கள் கத்தரியால் துண்டித்துள்ளனர். 


தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகள் முழுக்கை சட்டையில் வரகூடாது என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்விற்கு முழுக்கை சட்டையுடன் வந்த மாணவிகளின் சட்டை கையினை ஆசிரியர்கள், கத்தரியை கொண்டு துண்டித்த சம்பவம் அப்பகுதி உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி மாணவர்களின் பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் லலன் பிரசாத் சிங் தெரிவிக்கையில்... தேர்வின் விதிமுறைகள் குறித்து முன்னதாகவே மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை பின்பற்றாமல் மாணவர்கள் தேர்விற்கு வந்தது மாணவர்களின் தவறு என தெரிவித்துள்ளார்.


முன்னதாக இம்மாத முற்பகுதியில் நடைப்பெற்ற தேசிய மருத்துவ நுழைவுத் தேரவான NEET தேர்வில் மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளினை இதற தேர்வுகளுக்கும் கல்வி நிலையங்கள் பின்பற்றுதல் வேதனையளிப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.