கர்நாட்டக இளைஞர்களை வன்முறைக்கு தூண்டியதாக ஜிக்னேஷ் மீவானி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத்தில் பாஜக-வை எதிர்த்து சுயேடசையாக வெற்றிப் பெற்றவர் ஜிக்னேஷ் மீவானி. கர்நாடகாவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடந்தேறி வருகின்றது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 15 அன்று பிரதமர் மோடி கர்நாடகாவிற்கு பிரச்சாரம் மேற்கொள்ள செல்கின்றார்.


இந்த பிரச்சார கூட்டத்தில் கர்நாடக இளைஞர்கள் பங்கேற்று கூட்டத்தினை கலைக்க வேண்டும். கூட்டத்தில் இருக்கும் நாற்காலிகளை காற்றில் பறக்கவிட்டு இளைஞர்களுக்கு ஏற்படுத்துவதாக கூறிய 2 கோடி வேலைவாய்பு பற்றி கேள்வி எழுப்ப வேண்டும் என மீவானி தெரிவித்துள்ளார்.


இந்த கருத்து இளைஞர்களிடையே வன்முறை தூண்டுவது போல் இருப்பதாக கூறி கர்நாடக பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் நடந்த கூட்டம் ஒன்றில் மீவானி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில் மாபெரும் மக்கள் கூட்டத்தினை தூக்கத்தில் இருந்த எழுப்பவே நான் இங்கு வந்துள்ளேன். பாஜக ஆட்சியால் ஏற்படவிருக்கும் கொடுமைகளை பற்றி மக்களுக்கு புரியவைத்தாலே போதும். வரும் தேர்தலில் பாஜக-விற்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பர் எனவும் தெரிவித்துள்ளார்!