தமிழர்களின் தாய் மொழியினை மறக்கச்செல்லும் பாஜக - ராகுல்!
காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய மாநாடு டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய மாநாடு டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
இம்மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்...
"பல ஆண்டுகளுக்கு முன்னதாக நடைப்பெற்ற குருசேக்த்ர போர் தற்போது மீண்டும் நடைப்பெற்று வருகிறது. குருசேக்த்ர போரில் ஈடுபட்ட கௌரவாஸ் ஆதிக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டு போட்டியிட்டவர்கள். அவர்களை எதிர்த்து போட்டியிட்ட பாண்டவாஸ் உண்மைக்காக போராடியவர்கள். தற்போதைய குருசேக்த்ர போரின் பாண்டவர்கள் காங்கிரஸ், கௌரவாஸ் பாஜக அணியினர்.
கார்பரேட் நிருவணங்களின் பிரதிநிதிகளாக இருக்கும் பாஜக-வால், மக்களின் பிரதிநியாய் இருக்கும் காங்கிரஸ் அணியை வீழ்த்த முடியாது.
ஊழல்கள் நிரைந்ததாக நடைப்பெற்று வரும் ஆட்சியினை மக்கள் விரும்பவில்லை, இதனை ஆளும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும், இந்த ஊழல்களை மறைக்க, மக்களின் நினைவுகளில் இருந்து மறக்கடிக்க பல யுக்திகளை கையாண்டு வரும் அரசு, நல திட்டங்களை வழங்குவதில் பயன்படுத்தினால் நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருப்பார்கள்.
பாக்கிஸ்தானுக்கே செல்லாத இஸ்லாமியர்களை பாக்கிஸ்தானியர் என்பது, அழகிய தமிழ் மொழி பேசும் தமிழர்களை தங்கள் தாய் மொழியினை மறந்துவிடுங்கள் என்பதுமே ஆளும் ஆட்சியின் சூளுறைகள்.
நீங்கள் 33000 கோடி ரூபாயினை கொள்ளையடிங்கள், பாஜக எளிதாக உங்களை காப்பாற்றிவிடும். பொதுமக்களை பயமுறுத்தி வைத்திருக்கும் இந்த பாஜக ஆட்சியில் தான் முதன்முறையாக உச்சநீதி மன்ற நீதிபதிகள் நீதியை தேடி மக்களிடம் நேரடியாக சென்ற நிகழ்வை காணமுடிகிறது.
கொலை கொள்ள சம்பவங்களில் ஈடுபட்டவர்களை மக்கள் தலைவனாக ஏற்றுக்கொள்வார்களா? காங்கிரஸில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஓர் பெரிய சுவர் உள்ளது. அந்த சுவரை தகர்த்தெரிவதே என் முதல் கடமை." என பேசினார்.