தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று மாலை இடியுடன் கனமழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி பெரிய கோயில் வளாகத்தில் உள்ள கேரளந்தகன் கோபுர உச்சியில் சேதம் ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால், கோபுரத்தின் உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள சுதைச் சிற்பமான வலதுபுற கீர்த்தி முகத்தில் சிறுபகுதி சேதமடைந்தது. சேதமடைந்த பாகங்கள் கோபுரத்தின் உச்சியிலேயே சிதறின. இதில், சில கற்கள் கீழே விழுந்தன. 


இந்த நேரத்தில் கோபுரத்தின் அருகில் உள்ள காலணி வைப்பகத்தின் குளிர்சாதன பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டதுடன் மின் தடையும் ஏற்பட்டது. இதனால் பெரிய கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  


கோபுரம் சேதம் அடைந்ததையடுத்து பரிகார பூஜைகளுக்குப் பின் இரண்டொரு நாளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.