பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக முதல்வர் வேட்பாளர், BS எடியூரப்பா கர்நாட்டக மாநிலம் சிமோகாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் மே மாதம் 12-ஆம் நாள் கர்நாடக மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று பாஜக முதல்வர் வேட்பாளர், BS எடியூரப்பா, சத்தீஷ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் மற்றும் லோக் சபா MP அனந்த குமார் அவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.


கர்நாடகத்தின் பல்வேறு பகுதியில் இருக்கும் மக்களை சந்திக்கும் இவர்கள் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். மேலும் ஆளும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை குறித்து தங்களது விமர்சணங்களையும் முன்வைத்து வருகின்றனர்.



கர்நாடகா தேர்தல் 2018...


  • வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் - ஏப்ரல் 17

  • வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 24

  • கர்நாடக தேர்தல் - மே 12, 2018

  • வாக்கு எண்ணிக்கை - மே 15, 2018

  • 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.