எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து இன்று காலை 9 மணி அளவில் எடியூரப்பாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில்  அமைச்சரவை பதவியேற்பு இன்று நடக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற இறுதிக்கட்ட தீர்பினையடுத்து அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. பெரும்பான்மை பலம் உள்ள தங்களை தவிர்த்து, பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் ஏற்கனவே கூறியிருந்தது.


இதையொட்டி பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்கும்படி, கர்நாடகா ஆளுநர் அழைப்பு விடுத்தார். 


அதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரித்த சுப்ரீம் கோர்ட் எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் கடிதங்களை நாளை காலை 10 மணிக்குள் எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டனர்.


இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் எடியூரப்பாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க உள்ளதால் கர்நாடகாவில் பாஜகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். எடியூரப்பா இல்லம் அமைந்துள்ள இடம், சுற்றுவட்டாரங்களில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.