நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஐந்தாவது முறையாக, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி 2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த அன்று, சரியாக 11-மணிக்கு துவங்கி மதியம் 12.50-க்கு முடித்தார். நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலை அதிகமான பொருட்கள்:


# டிரக் மற்றும் பஸ் ரேடியல் டயர்கள்


# இறக்குமதி கைபேசிகள்


# இறக்குமதி எல்சிடி / எல்.ஈ. / ஓலெட் டிவி பேனல்கள் மற்றும் அதன் பாகங்கள். 


# வாசனை திரவியங்கள், கழிப்பறை தண்ணீர் மற்றும் இறக்குமதியாகும் அழகு சாதன பொருட்கள். 


# கைகடிகாரம், ஸ்மார்ட் வாட்ச்கள், சன்கிளாஸ்கள் சாதனங்கள்.


பட்ஜெட் 2018: யார் யாருக்கு சாதகம் - பாதகம் விவரம் -உள்ளே!


# வைரங்கள்.


#காலணி மற்றும் பட்டு துணிகள்.


# பழச்சாறுகள்


# இறக்குமதி செய்யப்பட்ட குருதிநெல்லி சாறு


# ஆரஞ்சு பழச்சாறு.


# பிற பழங்கள் மற்றும் காய்கறி சாறுகள்


யூனியன் பட்ஜெட் 2018: பட்ஜெட் குறித்து சில முக்கிய குறிப்புகள்


# சமையல் எண்ணெய்களான ஆலிவ் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய்.


# சுத்திகரிக்கப்பட்ட சமையல் காய்கறி எண்ணெய்கள், நிலக்கடலை எண்ணெய்.


# இறக்குமதி செய்யப்படும் தங்கம், தங்க முலாம் பூசப்பட்ட பிளாட்டினம் உட்பட பொருட்கள்.



விலை மலிவான பொருட்கள்:


# ரா முந்திரி கொட்டைகள்


# சோலார் கண்ணாடி / பேனல்கள் / சோலார் தயாரிப்புக்கள்.


# கோக்லீயர் இன்ஃப்ளூட்டன்களின் (cochlear implants) மூலப்பொருட்கள் மற்றும் பாகங்கள்.


தமிழக பட்ஜெட் 2017 - 2018: முழு விவரம்!!


# அறுவை சிகிச்சை சம்பந்தமான கருவிகள்.


# காதுகேளாதோர் பயன்படுத்தும் கருவிகள்.


# ஸ்க்ரூ சாதனங்கள்


பட்ஜெட்டில் விலை உயர்வு, குறைவு பொருட்களின் முழு விவரம்!


இதைத்தவிர, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏ) உயர்த்தி உள்ள ஏழு சதவீதத்தை கட்டண விகிதம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களின் டோல் கட்டணம் உயர்ந்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


2018-19 நிதியாண்டில் பங்குகளின் விற்பனைக்கு ரூ.1 லட்சத்துக்கு அதிகம் மதிப்புள்ள பங்கு விற்பனையில் இருந்து 10 சதவீத மூலதன வருவாய் வரி (LTCG) செலுத்த வேண்டும்.


மேலும் இதில், விவசாய கடன் இலக்கு 11 கோடி, ஊரக கட்டமைப்பு மேம்பாடுக்கு 14.34 கோடி, டிஜிட்டல் இந்தியாவிற்கு 3,073, மகளிர் நல மேம்பாடுக்கு 1.21 லட்சம் கோடி, உணவு மானியத்திற்கு 1.69 லட்சம் கோடி, இரயில்வே துறைக்கு 1.48 லட்சம் கோடி என பல்வேறு திட்டங்களை 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.