நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாட்டக மாநிலம் பெங்களூரில் இருந்து, சுமார் 29 சுற்றுலாப் பயணிகள் கொண்ட குழு உதகைமண்டத்திற்கு சுற்றுள்ளா சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து கர்நாடக மாநிலம் மத்தகரி செல்வதற்காக இக்குழு நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக சென்றுள்ளனர்.


பயணத்தின் போது தவளைமலை பகுதியில், குறுகலான இடத்தில் வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, சுமார் 40 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


முதுமலை வழியாக கர்நாடகா செல்லும் சாலை, விலங்குகள் நிறைந்த காடுகள் இருப்பதால் இரவு 9 மணிக்கு மூடப்படும். இதன் காரணமாக சோதனைச் சாவடியை உரியநேரத்தில் கடந்து செல்வதற்காக வாகனங்களை வேகமாக பயணிகள் இயக்கிச் செல்கின்றனர். இதனாலே அப்பகுதியில் அதிகளவில் விபத்துகள் நிகழ்வதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.