கொரோனா வைரஸ் காரணமாக, பெரும்பாலான மக்கள் இப்போது தூய்மையில் கவனம் செலுத்துகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், பல விஷயங்களுக்கான தேவை அதிகரிக்கும். சந்தைகள் பழையபடி திறந்த பிறகு அதன் விளைவு தெரியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்து, காகித நாப்கின்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டிஷ்யூ பேப்பர் (Tissue Paper) ஏற்கனவே அலுவலகங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் தனது இடத்தை உருவாக்கியுள்ளது. ஆனால், இப்போது இது மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கப்போகிறது.


அத்தகைய சூழ்நிலையில், காகித நாப்கின்களின் தொழிலைத் தொடங்க உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இந்தத் தொழிலைத் தொடங்க அரசாங்கமும் உங்களுக்கு உதவுகிறது. இதற்கான செயல்முறைகளை அறிந்து கொள்ளுங்கள்.


லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்


டிஷ்யூ பேப்பருக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த வணிகத்தில் ஒரு நல்ல எதிர்காலம் காணப்படுகிறது. இந்த தொழிலைத் (Small Business) தொடங்குவதன் மூலம் நீங்கள் நல்ல பணம் சம்பாதிக்கலாம். இது தவிர, இந்தத் தொழிலைத் தொடங்க அரசாங்கத்தின் உதவியையும் நீங்கள் பெறலாம்.


ALSO READ: 5000 ரூபாயில் அற்புத வர்த்தகம், மாதா மாதம் பெரிய லாபம்: காசு கொட்டும் காளான் வளர்ப்பு!!


முதலீடு எவ்வளவு இருக்கும்?


இந்த தொழிலை தொடங்க, நீங்கள் 3.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். 3.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், இந்த தொழிலை எளிதாக தொடங்கலாம். இவ்வளவு தொகை உங்களிடம இருந்தால், அதன் பிறகு, எந்தவொரு வங்கியிலும் முத்ரா திட்டத்தின் (Mudra Scheme) கீழ் நீங்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம். நீங்கள் கடனுக்கு விண்ணப்பித்தால், சுமார் 3 லட்சம் 10 ஆயிரம் ரூபாயை கால கடனாகவும், 5.30 லட்சம் ரூபாய் வரை மூலதன கடனாகவும் உங்களுக்கு கிடைக்கும்.


சுமார் 1 கோடி ஆண்டு வருமானம்


இந்த வணிகத்தில், நீங்கள் ஒரு வருடத்தில் 1.50 லட்சம் கிலோ காகித நாப்கின்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். இதை விட அதிகமாக செய்ய நீங்கள் ஒப்புதல் பெற வேண்டும். உற்பத்திக்குப் பிறகு அதை ஒரு கிலோ ரூ .65 என்ற விகிதத்தில் சந்தையில் விற்கலாம். நீங்கள் ஒரு வருடத்தில் 1.50 லட்சம் கிலோ காகிதத்தை உற்பத்தி செய்தால், 65 ரூபாயின் படி உங்கள் வருவாய் சுமார் 97.50 லட்சம் ரூபாயாக இருக்கும். இதிலிருந்து உங்கள் செலவுகள் அனைத்தையும் நீக்கிவிட்டால், ஒரு வருடத்தில் சுமார் 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.


செய்ய வேண்டிய செலவு


இந்த தொழிலைத் தொடங்க, நீங்கள் இயந்திரங்களுக்கு சுமார் 4.40 லட்சம் ரூபாய் செலவிட வேண்டும். இது ஒரு முறை மட்டுமே ஆகும் செலவாகும். நாம் மூலப்பொருளைப் பற்றி பேசினால், அதற்காக 7.13 லட்சம் ரூபாய் செலவாகும். மற்ற செலவுகளைப் பற்றி பேசினால், போக்குவரத்து, நுகர்பொருட்கள், தொலைபேசி, எழுதுபொருள், பராமரிப்பு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து முதல் முறை சுமார் 11 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.


ALSO READ: எந்த வங்கி குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும்.. Top 10 வங்கிகளின் பட்டியல்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR