ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் இதுபோன்ற சில மாற்றங்கள் சாதாரண மனிதனின் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜூலை இன்றுடன் முடிந்துவிட்டது, ஆகஸ்ட் மாதத்தில் இதே போன்ற சில மாற்றங்கள் நிகழ உள்ளது, இந்த மாற்றங்கள் உங்களின் பாக்கெட்டை நேரடியாக பாதிக்கலாம். இன்று ஜூலை மாதத்தின் கடைசி நாள் ஆகும், ஆகையால் நாளை அதாவது ஆகஸ்ட் மாதம் முதல் நடக்க இருக்கும் மாற்றங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகஸ்ட் மாதம் செய்யப்படும் மாற்றங்களில் எல்பிஜி எரிவாயு விலை, வங்கி அமைப்பு, வருமான வரி ரிட்டர்ன்ஸ் மற்றும் பிஎம் கிசான் போன்றவற்றை அடங்கும். இந்த மாற்றங்களைப் பற்றி நீங்கள் விரிவாக இங்கே தெரிந்துகொள்ளுங்கள். மேலும் இதன் மூலம் உங்கள் திட்டத்தை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.


மேலும் படிக்க | ITR Filing Last Date: ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் ‘Extend Due Date Immediately’, நீட்டுக்குமா அரசு? 


பேங்க் ஆஃப் பரோடா
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான மாற்றமாக இருக்கும். ஆகஸ்ட் 1 முதல் செக் மூலம் பணம் செலுத்துவதற்கான விதிகளை வங்கி மாற்றுகிறது. இது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படுகிறது. இதன் மூலம் 5 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலாக பரிவர்த்தனை செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு பாசிட்டிவ் பே முறையானது செயல்படுத்தப்படும். இது அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பினை வழங்கலாம்.


எல்பிஜி
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனங்கள் இம்முறை வீட்டு உபயோக மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றலாம். கடந்த முறை வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை குறைந்த நிலையில், வீடு உபயோக கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது.


பிஎம் கிசான் கேஒய்சி
பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ் கேஒய்சிக்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். அதாவது அடுத்த மாதம் முதல் விவசாயிகள் கேஒய்சி பூர்த்தி செய்ய முடியாது. விவசாயிகள் இப்போது தங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை மையத்திற்குச் சென்று இ-கேஒய்சி செய்து கொள்ளலாம். இது தவிர, பி.எம்.கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வீட்டிலேயே அமர்ந்து இ-கேஒய்சி ஆன்லைனிலும் செய்யலாம்.


அஞ்சலக திட்டங்களுக்கான வட்டி விகிதம்
தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இனி வரும் கூட்டத்திலும் கட்டாயம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேமிப்புகளுக்காக முதலீடும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரவிருக்கும் நாட்களில் இது குறித்த மாற்றமும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


வருமான வரி தாக்கல்
வருமான வரி தாக்கல் செய்ய இன்றுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், அதனை நீட்டிக்கும் திட்டம் இல்லை என அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இன்றுக்குள் வருமான வரி தாக்கல் செய்யப்படாவிட்டால், ஆகஸ்ட் 1 ல் இருந்து அபராதம் விதிக்கப்படலாம். அதன்படி ரூ. 5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். வரி செலுத்துபவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருந்தால், ரூ. 5000 அபராத கட்டணமாக செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | ITR Filing Update: ITR தாக்கல் செய்ய வேண்டிய தேதியை தவறவிட்டால் என்ன நடக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ