வாழ்க்கையில் தினம்தோறும் செலவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு எல்லோரும் தயாராக இருக்க வேண்டும். சம்பாதியத்தில் இருந்து திடீர் செலவுகளுக்கு என ஒரு பகுதியை நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை தவிர்க்கவும் முடியாது. ஏற்கனவே நீங்கள் கடனில் இருக்கிறீர்கள் என்றால், அதனை திருப்பிச் செலுத்த கஷ்டப்படுகிறீர்கள் என்றால் உடனடியாக செய்ய வேண்டிய 5 விஷயங்கள் இருக்கின்றன,. குறிப்பாக அடமானக் கடனில் இருக்கிறீர்கள் என்றால் என்ன செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடனை மாற்ற வேண்டும்?


உங்கள் அடமான கடனின் வட்டி விகித்தை குறைக்குமாறு கேளுங்கள். முடியாது என்றால் வேறொரு கடனாளரை தேடிப் பிடித்து அவர்களிடம் கடனை மாற்றிக் கொள்ளுங்கள். இதற்கு சில வங்கிகள் உடன்படுகின்றன. குறிப்பிட்ட காலம் நீங்கள் கடனை தவறாமல் செலுத்தி வரும்பட்சத்தில் நீங்கள் கடனாளரை மாற்றிக் கொள்ள முடியும். அதற்கான காலக்கெடு என பொதுவாக இருக்கும் நேரத்தை நீங்கள் கடந்து தகுதி பெற்றிருக்கிறீர்களா? என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம்.... முக்கிய அப்டேட்: மாநில அரசுகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்த எச்சரிக்கை


இஎம்ஐ காலத்தை நீட்டிக்கவும்


கடன் திரும்ப செலுத்துவதில் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால் உங்களின் கடனாளரிடம் பேசி இம்எம்ஐ தொகையை குறைக்க வலியுறுத்துங்கள். அதாவது கடன் செலுத்தும் காலத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களுகான இஎம்ஐ குறைய வாய்ப்பிருக்கிறது. இது உங்களுக்கான நிதிச் சுமையை குறைக்கும். 


வட்டிக்கு மட்டும் நகர்த்தவும்


அடமானக் கடன்களை உங்களால் செலுத்த முடியவில்லை என்றால் வட்டியை மட்டும் செலுத்தும் முறைக்கு மாறிக் கொள்ளுங்கள். இது பெருமளவுக்கான நிதிச் சிக்கலை உங்களுக்கு குறைக்கும். ஏனென்றால் அசலுடன் நீங்கள் வட்டி கட்டிக் கொண்டிருக்கும்போது சமாளிக்கவே முடியாத நிலையில் இருந்திருப்பீர்கள். வட்டிக்கு மட்டும் மாறும்போது தொகை மிக மிக குறைவாக இருக்கும். இது உங்களுக்கான நிதிச் சிக்கலில் இருந்து மீள உதவியாக இருக்கும்.


கடனாளரிடம் பேச்சுவார்த்தை 


மிகவும் தவிர்க்க முடியாத நேரத்தில் இந்த வாய்ப்பை நீங்கள் கையில் எடுக்கலாம். அதாவது பணம் உங்களால் செலுத்தவே முடியவில்லை என்ற சூழல் வருகிற போது கடனாளரிடம் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தி இஎம்ஐ தொகையை திரும்ப செலுத்துவதில் இருந்து கொஞ்ச காலம் விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள். அடமானக் கடன் என்பதால் கடனாளர்கள் ஒப்புக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்றாலும் வேறு வழியில்லை என்கிறபோது அவர்களே வழிக்கு வருவார்கள்.  


நிதி ஆலோசனை அவசியம்


கடனில் நீங்கள் இருக்கும்போது பொருளாதாரம் சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் அளிக்கும் சிறிய ஆலோசனை கூட உங்களுக்கு மிகப்பெரிய வழியை அமைத்துக் கொடுக்கும். எந்தவொரு நிதிச் சிக்கலும் இருக்காது. மேலும், சரியான நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவுகளை அவர்கள் உங்களுக்கு தெரிவிப்பார்கள். 


மேலும் படிக்க | சந்தோஷத்தில் திளைக்கும் ஊழியர்கள்... ஊதியத்தை அதிகரித்த மாநில அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ