Pongal Gift | இன்று பொங்கல் பரிசு தொகுப்பு... நாளை வங்கிக் கணக்கில் ரூ.1000? - அரசு முக்கிய முடிவு

Pongal Gift | பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலை ஆகியவை இன்று முதல் விநியோகிக்கப்படும் நிலையில், நாளை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு (Pongal Gift) மற்றும் இலவச வேட்டி, சேலை (Free Dhoti Saree) திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் தொடங்கிவைக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் இன்று முதல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கும்.

1 /8

வரும் பொங்கல் பண்டிகையை (Pongal 2025) முன்னிட்டு தமிழ்நாடு அரசு, ரேசன் அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ கரும்பு ஆகியவற்றை பொங்கல் பரிசு தொகுப்பாக (Pongal Gift 2025) வழங்குகிறது.   

2 /8

பொங்கல் பரிசு தொகுப்போடு இலவச வேட்டி, சேலையும் (Free Dhoti Saree) வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.20 கோடி ரேசன் அட்டைத்தாரர்களுக்கு  இந்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.   

3 /8

ரேசன் அட்டைத்தாரர்களுக்கு (TN Ration Card Holders) மட்டுமின்றி இலங்கை மறுவாழ்வு முகாம்களில் இருப்பவர்களுக்கும் இந்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்பு வழங்க தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) சுமார் ரூ.280 கோடி வரை செலவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

4 /8

ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் (TN CM MK Stalin) இன்று காலை 8.45 மணிக்கு தொடங்கி வைக்க இருக்கிறார். சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம், சைதாப்பேட்டை, சின்னமலை நியாய விலைக்கடையில் முதலமைச்சர் ஸ்டாலின் இத்திட்டங்களை தொடங்கிவைக்க உள்ளார்.   

5 /8

கடந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.1000 ரொக்கமாகவும் வழங்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு பல்வேறு பேரிடர்களுக்கு மாநில நிதி பயன்படுத்தப்பட்டதாலும், ஒன்றிய அரசிடம் இருந்து பேரிடர் நிவாரண நிதி சரியாக வராத காரணத்தினாலும் இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.1000 அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.   

6 /8

அரசுக்கு நிதி நெருக்கடி இருக்கும் காரணத்தால் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி, சேலை மட்டும் இந்தாண்டு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ரேசன் கடைகளில் காலையில் 100 பேர், மாலையில் 100 பேர் வீதம் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.  

7 /8

டோக்கனை வைத்து மக்கள் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலையை பெற்றுக்கொள்ளலாம். டோக்கன் வாங்காதவர்களும் கூட, டோக்கன் பெற்றவர்கள் பொருள்களை பெற்ற பின்னர் பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம்.   

8 /8

பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் 1000 ரூபாய் நாளைக்கே (ஜன. 10) பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்னரே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Urimmai Thogai Scheme) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.