7th Pay Commission: 2023 யூனியன் பட்ஜெட்டுக்குப் பிறகு 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை பெற காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கப்போவதாக கூறப்படுகிறது.  7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அகவிலைப்படியை (டிஏ) உயர்த்தியதுடன், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு இதுவரையில் நிலுவையில் இருந்து வரும் 18 மாத அகவைலைப்படியை வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றது.  இந்த ஆண்டின் பிப்ரவரி 1-ம் தேதியன்று மோடி அரசு தனது தாக்கல் செய்யவுள்ளது, இந்த மத்திய பட்ஜெட் 2023க்குப் பிறகு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்தும் சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | PAN Link: 2023 மார்ச் மாதத்திற்குள் ஆதாருடன் பான் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?



கொரோனா தொற்றுநோய் காரணமாக அனைத்து துறைகளும் ஸ்தம்பித்த நிலையில் ஊழியர்களின் அகவிலைப்படி வழங்களில் பாதிப்பு ஏற்பட்டது.  ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 முதல் ஜனவரி 1, 2022 வரையிலான மூன்று தவணை அகவிலைப்படி பாக்கிகள் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அரசாங்கம் அகவிலைப்படியை மீட்டெடுத்தது.  இருப்பினும் இதுவரை மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்து வரும் அகவிலைப்படி பற்றி எவ்வித அப்டேட்டையும் வெளியிடவில்லை.  கடந்த 2021ம் ஆண்டில் ஜூலை 1 முதல் மத்திய அரசு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 11% உயர்த்தியது.  இதனை தொடர்ந்து, ஜூலை 2021 முதல் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரித்தது.


7வது ஊதியக் குழு பரிந்துரைகளின்படி தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.  மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால் அவர்களின் வங்கி கணக்குகளில் சுமார் ரூ.2.18 லட்சம் வரையில் தொகை கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி முதல் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்களின் அகவைலைப்படியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இதுகுறித்து முன்னர் நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி கிடைக்காது என்று கூறி அவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தினார்.


மேலும் படிக்க | உங்கள் பான், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை கண்டறிவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ