7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்புகள்: சமீப காலங்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் வந்த வண்ண உள்ளன. இப்போது இவர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி உள்ளது. அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கப் போகிறது. ஆனால், இதனுடன் இன்னும் பல ஏற்றங்களும் ஏற்படவுள்ளன. இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவம்பர் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீடு (AICPI Index) 139.1ஐ எட்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 4 சதவீதம் அதிகரிப்பது உறுதியாகக் கருதப்படுகிறது. இது ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடியாக பயனடைவார்கள்.


அகவிலைப்படி 50% ஐ எட்டும்


மத்திய மோடி அரசு, மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படியை புதிய ஆண்டில் அதாவது ஜனவரி 2024க்கு மீண்டும் 4% உயர்த்தக்கூடும். இருப்பினும், இதற்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில்தான் வெளிவரும். நவம்பர் 2023 வரையிலான ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் வந்துவிட்டன. அவை  அகவிலைப்படியில் 4 சதவீத அதிகரிப்பை சுட்டிக்காட்டுகின்றன. அகவிலைப்படி 4 சதவீதம் உயர்ந்தால் மொத்த அகவிலைப்படி (DA) 50 சதவீதத்தை எட்டும்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு நல்ல செய்திகள் கிடைக்கும்


இப்போது இரண்டாவது நல்ல செய்தியைப் பற்றி பேசலாம். மத்திய அரசு ஊழியர்கள் ஃபிட்மென்ட் ஃபாக்டர் (Fitment Factor) அதிகரிப்பையும் பரிசாகப் பெறலாம். இதற்கான கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இப்போது இந்த ஆண்டு அது அதிகரிக்கும் என்று பேசப்படுகிறது. இது நடந்தால், சம்பளத்தில் பெரிய ஏற்றம் ஏற்படும். 7-வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) கீழ் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பால், மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.8,860 உயரும். 


டிஏ உயர்வுக்குப் (Da Hike) பிறகு இந்த உயர்வு வழங்கப்படலாம். தற்போது, ​​ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 மடங்காக உள்ளது. வரும் நாட்களில் இது 3.68 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது நடந்தால் லெவல்-3ல் அடிப்படை சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும். ஊழியர்களின் சம்பளத்தில் நேரடியாக ரூ.8,000 உயர்த்தப்படும். தவிர, இதன் தாக்கம் அகவிலைபப்டியிலும் இருக்கும். 


மேலும் படிக்க | Budget 2024: சம்பள வர்க்கத்திற்கு நிதி அமைச்சரின் குட் நியூஸ்... இந்த வரம்பு அதிகரிக்கலாம்


X Class & TPTA – அடிப்படை சம்பளம் மாதம் ரூ 18,000


அடிப்படை ஊதியம்: ரூ 18,000
அகவிலைப்படி (46%): ரூ 8,280
வீட்டு வாடகை கொடுப்பனவு (27%): ரூ 5,400
போக்குவரத்து அலவன்ஸ்: ரூ.1,350
போக்குவரத்து அலவன்ஸ் மீதான டிஏ: ரூ 621
மொத்த சம்பளம்: ரூ 33,651


ஃபிட்மென்ட் ஃபேக்டர் அதிகரித்தால் சம்பளம் ரூ.49,420 அதிகரிக்கும்


ஒரு உதாரணய்த்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். லெவல்-3ல் உள்ள ஒரு மத்திய ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) ரூ.18,000 எனில், அலவன்ஸ்கள் தவிர்த்து அவருடைய சம்பளம் ரூ.18,000 X 2.57 = ரூ.46,260 ஆக இருக்கும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு அதிகரித்தால் சம்பளம் 26000X3.68= ரூ 95,680ஐ எட்டும். பணியாளர்களுக்கு இதில் பம்பர் சலுகைகள் கிடைக்கும். அதாவது ஒட்டுமொத்தமாக ஊழியர்களுக்கு தற்போதைய சம்பளத்துடன் ஒப்பிடுகையில் ரூ.49,420 உயர்வு கிடைக்கும். இந்த கணக்கீடு குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் மீதானது. அதிகபட்ச சம்பளம் உள்ளவர்கள் இதை விட பெரிய பலன்களைப் பெறலாம்.


மேலும் படிக்க | சாண்ட்விச்சில் காணப்பட்ட புழு.... இண்டிகோ விமான நிறுவத்திற்கு FSSAI நோட்டீஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ