7th Pay Commission: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்தியப் பணிகளில் இருக்கிறார்களா? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பண்டிகை காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நல்ல செய்தி காத்திருப்பதாக்க அரசங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த அறிவிப்பு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசாக கிடைக்கவுள்ளது. இதற்காக ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அமைச்சரை கூட்டம்


அக்டோபர் 3 ஆம் தேதி, அதாவது நாளை மத்திய அரசின் சிறப்பு அமைச்சரவை கூட்டம் (Cabinet Meeting) நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி குறித்த முடிவு எடுக்கப்படலாம். இந்த முடிவுக்கு நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள்.


இது தவிர, மத்திய அரசாங்கம் அக்டோபர் முதல் வாரத்திலேயே அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிப்புக்கான அறிவிப்பையும் வெளியிடும் என்று கூறப்படுகிறது. எனினும் இன்னும் அரசாங்க தரப்பில் இருந்து டிஏ உயர்வு தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்திற்கான பிஏ உயர்வு (DA Hike) பற்றிய அறிவிப்பு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ஒட்டி வருவது வழக்கம். அகவிலைப்படி இந்த முறை 3%-4% அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை அரசாங்கம் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


DA Arrears: அகவிலைப்படி உயர்வு 1, ஜூலை 2024 முதல் செயல்படுத்தப்படும்


நாளை நடக்கவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவலைப்படியும், ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணமும், மூன்று சதவீதம் அதிகரிக்கப்பட்டால் அவர்களது மொத்த டிஏ (DA) மற்றும் டிஆர் (DR) 53 சதவீதமாக உயரும். அதேசமயம் அகவிலைப்படியும் அகவிலை நிவாரணமும் (Dearness Allowance) நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டால், மொத்த டிஏ (DA) மற்றும் டிஆர் (DR) 54 சதவீதமாக அதிகரிக்கும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை ஒன்று 2024 முதல் அமலில் இருக்கும். இது தவிர ஊழியர்களுக்கு மூன்று மாதத்திற்கான டிஏ அரியர் தொகையும் அளிக்கப்படும். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அகவிலைப்படி அதிகரிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும்.


மேலும் படிக்க | EPF Withdrawal Rules: விதிகளிக் பெரிய மாற்றம், பிஎஃப் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி... அமைச்சர் அளித்த அப்டேட்


Dearness Allowance Calculation: அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகின்றது


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் (AICPI Index) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. பொதுவாக பொருட்களின் விலைகள் எவ்வளவு உயர்ந்திருக்கின்றன என்பதை இந்த குறியீடு காட்டுகிறது. ஏசிபிஐ குறியீடு அதிகரிக்கும் போதெல்லாம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியும் அதிகரிக்கிறது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி சம்பளத்தில் முக்கியமான அம்சமாக இருக்கின்றது. ஏனென்றால் இது அவர்களது வருமானத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.


Salary Hike Calculation: சம்பளம உயர்வு கணக்கீடு


சில உதாரணங்கள் மூலம் ஊதிய உயர்வு கணக்கீட்டை புரிந்துகொள்ளலாம். 


- ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) 18,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். 
- அகவிலைப்படி 3% அதிகரித்தால் அவருக்கு சம்பளத்தில் ரூ.540 மாத அதிகரிப்பு இருக்கும்.
- ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும். 


- அகவிலைப்படி 4% அதிகரித்தால், அவரது மாத சம்பளத்தில் 720 ரூபாய் அதிகரிப்பு இருக்கும்.
- ஆண்டு சம்பளம் ரூ.7,440 அதிகரிக்கும்.


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு எப்போது வரும்? 20%-35% ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ