7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அகவிலைப்படி உயர்வு குறித்து புதன்கிழமை, அதாவது இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு அறிவிக்கும் எனத் தெரிகிறது. பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க மத்திய அமைச்சரவை இன்றைய தினம் கூடும் என்றும் அதில் அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று முந்தைய தகவல்கள் தெரிவித்தன. ஆனால் சமீபத்திய அறிக்கைகள் டிஏ உயர்வு (DA Hike) 4 சதவீதம் இருக்கும் என்று கூறுகின்றன.


3% டிஏ உயர்வு: காரணம் என்ன?


“ஜூன் 2023க்கான CPI-IW ஜூலை 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. அகவிலைப்படியில் நான்கு சதவீத புள்ளி உயர்வை நாங்கள் கோருகிறோம். ஆனால் அகவிலைப்படி உயர்வு மூன்று சதவீத புள்ளிகளுக்கு சற்று அதிகமாக இருக்கும். தசம புள்ளிக்கு அப்பால் டிஏவை அரசாங்கம் உயர்த்துவதில்லை. ஆகையால் டிஏ மூன்று சதவீத புள்ளிகள் அதிகரித்து 45 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று அகில இந்திய ரயில்வே ஃபெடரேஷன் பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா முன்னர் தெரிவித்திருந்தார். 


4% டிஏ உயர்வு: காரணம் என்ன? 


ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரைடிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் டிஏ உயர்வு 4 சதவிகிதம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. 


மத்திய ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி (DA) தொழில்துறை தொழிலாளர்களின் நுகர்வோர் விலைக் குறியீட்டால் (AICPI-IW) தீர்மானிக்கப்படுகிறது. அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் நிலையானது. 


 7th CPC DA% = [{Average of AICPI-IW (Base Year 2001=100) for the last 12 months – 261.42}/261.42x100]
=[{382.32-261.42}/261.42x100]= 46.24.


7வது ஊதியக் குழுவின் படி, கடந்த 12 மாதங்களில் AICPI-IW இன் சராசரி 382.32 ஆகும். சூத்திரத்தின்படி, மொத்த அகவிலைப்படி 46.24% ஆக இருக்கும். தற்போதைய அகவிலைப்படி விகிதம் 42% ஆகும். அத்தகைய சூழ்நிலையில், ஜூலை 1, 2023 முதல், டிஏவில் 46.24%-42% = 4.24% அதிகரிக்கும். அகவிலைப்படி தசமத்தில் வழங்கப்படாததால், 4 சதவீத டிஏ வழங்கப்படும். இதன் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரும் லாபகரமான் மாற்றம்


அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏன் வழங்கப்படுகிறது?


பணவீக்கம், விலைவாசி ஏற்றத்தை ஈடு செய்ய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) வழங்கப்படுகிறது. இது வாழ்க்கைச் செலவில் ஏற்படும் உயர்வை ஈடுகட்ட வழிவகுக்கும். மேலும் இது தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டால் (CPI-IW) அளவிடப்படுகிறது. இந்த மாற்றங்களை ஈடு செய்ய ஆண்டுக்கு இரண்டு முறை டிஏ உயர்வு வழங்கப்படுகிறது.


DA எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் இருவருக்கும் அகவிலைப்படியானது, தொழிலாளர் பணியகத்தால் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான (CPI-IW) மிக சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. கடந்த முறை, மார்ச் 2023 இல் DA 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீதமாக இருந்தது. திருத்தப்பட்ட விகிதம் ஜனவரி 2023 முதல் பொருந்தும். இப்போது மேலும் 4 சதவீத DA உயர்வு எதிர்பார்க்கப்படுவதால், அந்த உயர்வு ஜூலை 2023 முதல் இது பொருந்தும்.


சம்பளம் எவ்வளவு உயரும்?


இப்போது அகவிலைப்படி உயர்த்தப்பட்டால், மொத்த சம்பளத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். இது தவிர, ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்திற்கான அகவிலைபடி அதிகரிப்புக்கான நிலுவைத் தொகையும் கிடைக்கும். இதனால் ஊழியர்கள் நவம்பர் மாத சம்பளத்தில் ஒரு பெரிய தொகையை எதிர்பார்க்கலாம். 


சம்பள கணக்கீடு


42 சதவீத அகவிலைப்படியில், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 உள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூ.7,560 கூடுதலாக கிடைக்கும். இருப்பினும், முன்மொழியப்பட்ட 4 சதவீத உயர்வு கிடைத்தால், இந்த மாத சம்பளம் ரூ.8,280 ஆக உயரலாம். இதன் விளைவாக ஆண்டு சம்பளம் ரூ.8,640 ஆக உயர்த்தப்படும்.


மேலும் அடிப்படைச் சம்பளம் அதிகமாக உள்ள மற்ற ஊழியர்களுக்கு, அதாவது அடிப்படை சம்பளம் ரூ. 56,900 உள்ளவர்களுக்கு தற்போதைய 42 சதவீத டிஏ -வில் அவர்களின் மாத வருமானத்தில் ரூ.23,898 சேர்க்கிறது. 4 சதவீத உயர்வுக்குப் பிறகு, இந்தத் தொகை ரூ.26,174 ஆக அதிகரித்து, ஆண்டு சம்பளம் ரூ.27,312 ஆக உயரும்.


மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி அளித்த புதிய வழிகாட்டுதல்: KYC குறித்து வந்த பெரிய அப்டேட்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ