டிஏ மட்டுமல்ல, இந்த அலவன்சிலும் 3% ஏற்றம்: ஊழியர்களின் ஊதியத்தில் சூப்பர் ஏற்றம்
7th Pay Commission: அகவிலைப்படியைத் தவிர, மத்திய ஊழியர்கள் பல வகையான அலவன்ஸ்களைப் பெறுகிறார்கள். இவற்றில் ஒன்று வீட்டு வாடகை கொடுப்பனவு.
7வது ஊதியக்கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பல விஷயங்களில் நல்ல நிவாரணங்கள் கிடைக்கவுள்ளன. விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரித்து 50 சதவீதத்தை தாண்டும். தற்போது சமீபத்தில் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 46% ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வந்துள்ள ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி மீண்டும் 4% அதிகரித்து 50% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அகவிலைப்படி அதிகரிப்புடன், ஊழியர்களின் இதர அலவன்ஸும் 3 சதவீதம் உயரும். இதனால் அவர்களது சம்பளம் பெருமளவில் உயர வாய்ப்பு உள்ளது.
வீட்டு வாடகை கொடுப்பனவுகளில் 3 சதவீத அதிகரிப்பு இருக்கும்
அகவிலைப்படியைத் தவிர, மத்திய ஊழியர்கள் பல வகையான அலவன்ஸ்களைப் பெறுகிறார்கள். இவற்றில் ஒன்று வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA). இந்த உயர்வு தொடர்பான விதிகளை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விதி அகவிலைப்படியுடன் மட்டுமே தொடர்புடையது. 2021 ஆம் ஆண்டில், அகவிலைப்படி 25% ஐத் தாண்டியபோது எச்ஆர்ஏ -வில் திருத்தம் செய்யப்பட்டது. ஜூலை 2021 இல், அகவிலைப்படி 25% ஐத் தாண்டியவுடன், எச்ஆர்ஏ 3% அதிகரித்தது. எச்ஆர்ஏ -வின் தற்போதைய விகிதங்கள் 27%, 18% மற்றும் 9% ஆக உள்ளன. இப்போது அகவிலைப்படி உயர்வுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். புதிய ஆண்டில் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், மீண்டும் ஒருமுறை HRA -வில் 3 சதவீதம் திருத்தம் செய்யப்படும்.
வீட்டு வாடகை கொடுப்பனவு
DoPT விதிகளின் படி, மத்திய ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) திருத்தம் அகவிலைப்படியின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அனைத்து ஊழியர்களும் அதிகரித்த HRA இன் பலனைப் பெறப் போகிறார்கள். தற்போது நகரத்தின் வகையின்படி, எச்ஆர்ஏ 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என்ற விகிதத்தில் கிடைக்கிறது. இதற்கான குறிப்பாணையை 2015 ஆம் ஆண்டு அரசு வெளியிட்டது. இதில் ஹெச்ஆர்ஏ டிஏவுடன் இணைக்கப்பட்டது. அதன் மூன்று கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன - 0, 25, 50 சதவீதம்.
எச்ஆர்ஏ 30 சதவீதத்தை தாண்டும்
வீட்டு வாடகை கொடுப்பனவில் அடுத்த திருத்தம் 3% ஆக இருக்கும். தற்போதைய அதிகபட்ச விகிதம் 27 சதவீதமாகும். திருத்தத்திற்குப் பிறகு அதிகபட்ச விகிதம் 30% ஆக இருக்கும். ஆனால், அகவிலைப்படி 50% -ஐ எட்டும்போதுதான் இது நடக்கும். அகவிலைபப்டி 50 சதவீதத்தை எட்டியவுடன், எச்ஆர்ஏ நகர வகைகளுக்கு ஏற்ப 30%, 20% மற்றும் 10% ஆக மாறும் என குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களின்படி வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வகைகள் உள்ளன. தற்போதுள்ள நிலவரப்படி எக்ஸ் பிரிவில் வரும் மத்திய ஊழியர்களுக்கு 27 சதவீத ஹெச்ஆர்ஏ கிடைக்கிறது. டிஏ 50% ஆக உயர்ந்தால், இது 30% ஆகிவிடும். அதே நேரத்தில், ஒய் பிரிவு ஊழியர்களுக்கு இது 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயரும். இசட் வகுப்பு மக்களுக்கு இது 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும்.
எச்ஆர்ஏ: இதில் X,Y மற்றும் Z பிரிவுகள் என்றால் என்ன?
50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் X பிரிவில் வருகின்றன. இந்த நகரங்களில் பணியமர்த்தப்படும் மத்திய பணியாளர்களுக்கு 27 சதவீதம் ஹெச்ஆர்ஏ வழங்கப்படுகிறது. Y பிரிவு நகரங்களில் இது 18 சதவீதமாகவும், Z பிரிவில் 9 சதவீதமாகவும் இருக்கும்.
HRA: இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
7வது ஊதிய மேட்ரிக்ஸின் (7th Pay Commission) படி, லெவல்-1ல் உள்ள கிரேடு பேயில் மத்திய ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதம் ரூ.56,900 ஆகும். பிறகு அவர்களின் எச்.ஆர்.ஏ (House Rent Allowance) 27 சதவீதம் என்ற விகிதத்தில் கணக்கிடப்படுகிறது. இதை எளிமையான கணக்கீடு மூலம் புரிந்து கொள்ளலாம்.
எச்ஆர்ஏ = ரூ 56,900 x 27/100 = மாதம் ரூ 15,363
எச்ஆர்ஏ 30% ஆனால் = ரூ 56,900 x 30/100 = மாதம் ரூ 17,070
எச்ஆர்ஏ -வில் ஏற்படும் மொத்த வேறுபாடு: மாதத்திற்கு ரூ 1,707
ஒரு ஆண்டில் எச்ஆர்ஏ தொகையில் அதிகரிப்பு = ரூ 20,484
மேலும் படிக்க | தஞ்சாவூர் - சென்னை ஏர் டாக்ஸி சேவை... மிக மிக விரைவில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ