7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவை எப்போது? விளக்கம் கொடுத்த அரசு!
7th Pay Commission: கொரோனா சமயத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு 18 மாதங்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்கப்படவில்லை.
7th Pay Commission: கொரோனா தொற்றுநோய் உலகையே அச்சுறுத்தி வந்த சமயத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது. கொரோனா சமயத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு 18 மாதங்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை அரசு வழங்காமல் இருந்து வந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்க்கை செலவுகளை சமாளிப்பதற்காக அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்கப்படுகிறது. பொதுவாக ஒரு ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய இரண்டு மாதங்களில் அகவிலைப்படியில் திருத்தம் செய்யப்படுகிறது. அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு எப்போது 18 மாத நிலுவைத்தொகை கிடைக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் படிக்க | Same Sex Marriage: மத்திய அரசையும் மீறி சட்டப்பூர்வமாகுமா தன்பாலின திருமணம்?
இதுகுறித்து லோக் சபாவில் தெரிவித்ததாவது, 2020ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று தாக்கத்தின் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறையான தாக்கத்தினால் 2020-21 நிதியாண்டில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது. 18 மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண நிலுவை தொகையை அரசு ஊழியர்களுக்கு 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 ஆகிய தேதிகளின்படி மூன்று தவணைகளாக வழங்குவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது, பின்னர் கொரோனா காலத்தில் அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்த முடிவு நிறுத்தப்பட்டது.
கொரோனா தாக்கம் பொருளாதார எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தியதால் 2020-21 நிதியாண்டில் நிலுவை தொகையை வழங்குவது சாத்தியப்படவில்லை. இப்போதும் கூட அரசின் நிதி பற்றாக்குறை எதிர்பார்த்த அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை மொத்தமாக ரூ.3440232 சேமிக்கப்பட்டு கொரோனா தொற்றுநோயால் அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ஈடுசெய்ய வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு வழங்கவேண்டிய 18 மாத நிலுவை தொகை எப்போது வேண்டுமானாலும் வழங்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 ஜாக்பாட் அறிவிப்புகள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ