Pongal Gift | ரேஷன் கார்டு இல்லாதவர்களும் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்
Pongal Gift | ரேஷன் கார்டு இல்லாதவர்களும் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கமாக ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இலவசமாக இந்த பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். கூடவே ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் கொடுக்கப்படும். இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை எப்படி பெறுவது? என்ற கேள்வி எழலாம்.
அவர்களுக்காக தமிழ்நாடு அரசு மலிவு விலையில் கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் பொங்கல் பரிசு தொகுப்பை விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள். பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
இதில் மலிவு விலையில் மளிகை பொருட்கள் இடம்பெறும். இந்த மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு, இனிப்பு பொங்கல் தொகுப்பு, கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு, பெரும் பொங்கல் தொகுப்பு என மூன்று வகையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இனிப்பு பொங்கல் தொகுப்பு : பச்சரிசி (BPT 43) 500 கிராம், பாகுவெல்லம் - 500 கிராம். ஏலக்காய் - 5கிராம். முந்திரி 50கிராம். ஆவின் நெய் - 50கிராம். பாசிபருப்பு - 100 கிராம். உலர் திராட்சை -50 கிராம் என 7 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு. சிறிய பையுடன் ரூ.199/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
சிறப்பு பொங்கல் தொகுப்பு ; மஞ்சள் தூள்-50கிராம், சர்க்கரை-500 கிராம். துவரம் பருப்பு-250 கிராம், கடலைப் பருப்பு-100 கிராம். பாசிப் பருப்பு-100 கிராம். உளுத்தம் பருப்பு-250 கிராம். கூட்டுறவு உப்பு-1 கிலோ, நீட்டு மிளகாய்-250 கிராம். தனியா-250 கிராம். புளி-250 கிராம். பொட்டுக்கடலை-200 கிராம். மிளகாய் தூள்-50 கிராம். செக்கு கடலை எண்ணெய் 1/2 லிட்டர். கடுகு-100 கிராம். சீரகம்-50 கிராம், மிளகு-25 கிராம், வெந்தயம்-100 கிராம், சோம்பு-50 கிராம், பெருங்காயம்-25 கிராம் என 19 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு. மளிகை பையுடன் ரூ499/- என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பெரும் பொங்கல் தொகுப்பு : மஞ்சள் தூள்-50 கிராம். சர்க்கரை-500 கிராம். கூட்டுறவு உப்பு-1 கிலோ. துவரம் பருப்பு-250 கிராம். உளுத்தம் பருப்பு-250 கிராம். கடலைப் பருப்பு-200 கிராம். பச்சைப் பட்டாணி-100 கிராம். பாசிப் பருப்பு (சிறுபருப்பு:) -250 கிராம். வெள்ளை சுண்டல்-200 கிராம், வேர்க்கடலை-200 கிராம். பொட்டுக்கடலை-200 கிராம். வரமிளகாய்-250 கிராம், புளி-200 கிராம், தனியா-250 கிராம். கடுகு-100 கிராம். மிளகு-50 கிராம். சீரகம்-50 கிராம், வெந்தயம்-100 கிராம்.
சோம்பு-50 கிராம். ஏலக்காய்-5 கிராம், செக்கு கடலை எண்ணெய்-1/2 லிட்டர். வரகு-500 கிராம், சாமை-500 கிராம், திணை-500 கிராம். ரவை-500 கிராம். அவல்-250 கிராம். ராகிமாவு-500 கிராம். கோதுமை மாவு -500 கிராம். ஜவ்வரிசி-200 கிராம், வறுத்த சேமியா-170 கிராம், மல்லி தூள்-50 கிராம். சாம்பார் தூள்-50 கிராம், மிளகாய் தூள்-50 கிராம். பெருங்காயத் தூள்- 25 கிராம் என 34 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு. பெரிய மனிகை தொகுப்புடன் ரூ.999/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த பெரும் பொங்கல் தொகுப்புடன் மட்டும் அரை கிலோ நாட்டுச் சர்க்கரை விலையில்லாமல் வழங்கப்படவுள்ளது.
இந்த தொகுப்புகள் அனைத்தும் வெளி சந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. எனவே, கூட்டுறவுத் துறையின் மூலம் "கூட்டுறவு பொங்கல்" என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் பெற்றுக் கொள்ளலாம்.
ரேஷன் கார்டு உள்ளவர்களும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ள முடியும் என்பதால் அவர்களுக்கு இரண்டு பொங்கல் பரிசு தொகுப்பும், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ஒரு பொங்கல் பரிசு தொகுப்பும் பெற்றுக் கொள்ள முடியும்.