7வது சம்பள கமிஷன் டிஏ நிலுவை புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கான 2022 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படி இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட உள்ளது. தற்போது மத்திய பணியாளர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இது குறைந்தபட்சம் 4% அல்லது 5% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில், அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு என பல கொடுப்பனவுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக, 2020 முதல் ஜூன் 2021 வரை நிலுவையில் உள்ள ஒன்றரை ஆண்டு டிஏ நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என ஊழியர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது அகவிலைப்படி 34 சதவீதமாக உள்ளது


ஜூலை 2021 முதல் மத்திய அரசு அகவிலைப்படியை 11% உயர்த்தியது. அதன் பிறகு அகவிலைப்படி மீண்டும் இருமுறை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அகவிலைப்படி  சதவீதமாக உள்ளது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள டிஏ நிலுவைத் தொகை குறித்து எந்தப் பேச்சும் இல்லை. கொரோனா காலத்தில் அப்போது அத்தியாவசியமாக இருந்த பணிகளுக்காக அகவிலைப்படி முடக்கப்பட்டதால், அதன் நிலுவை தொகையை வழங்குவதற்கான எண்ணம் இல்லை என்று அரசு தெளிவுபடுத்துயுள்ளது. 


மேலும் படிக்க | 7th pay commission: டிஏ உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்! 


18 மாத இழப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை


ஜெசிஎம் தேசிய கவுன்சில் செயலாளர் (ஊழியர்கள் தரப்பு) சிவ கோபால் மிஸ்ரா, அகவிலைப்படியை நிறுத்தும் முடிவு அரசின் முடிவாக இருந்தது என்றும் அதன் முடக்கம் நீக்கப்பட்டதும், முடக்கப்பட்ட காலத்திற்கான இழப்பீட்டை அளிப்பதும் அரசின் கடமை என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார். ஒன்றரை ஆண்டிற்கான நிலுவைத் தொகை (18 மாத டிஏ ஏரியர்) தொடர்பாக அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் மிஸ்ரா கூறுகிறார்.


11 சதவீத மொத்த நிலுவைத் தொகை கிடைக்குமா?


2021ஆம் ஆண்டு, ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி ஒரே நேரத்தில் 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இது ஜூலை 1, 2021 முதல் செயல்படுத்தப்பட்டது. ஜனவரி 2020, ஜூன் 2020, ஜனவரி 2021க்கான அகவிலைப்படியானது கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு தடை நீக்கப்பட்டதும், அது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டது. ஆனால், டிஎ அரியர் குறித்து எந்தப் பேச்சும் இல்லை. இப்போது 18 மாத நிலுவைத் தொகை குறித்து ஏதாவது முடிவு எடுக்கப்பட்டால், ஊழியர்களுக்கு மொத்தமாக 11 சதவீதம் நிலுவைத் தொகை வழங்கப்படும்.


ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகலாம்


ஜூலை 2022 இல் அகவிலைப்படி உயர்வு குறைந்தது 4 சதவீதமாக இருக்கும் என்பது ஏஐசிபிஐ-இன் மே மாதத் தரவுகளிலிருந்து தெளிவாகிறது. அதாவது, 7வது ஊதியக் குழுவின் கீழ், மொத்த அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்து 38 சதவீதத்தை எட்டும். மே 2022 வரை தொழிலாளர் அமைச்சகத்தின் ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் 129ஐ எட்டியுள்ளன. ஜூன் 2022க்கான புள்ளிவிவரங்கள் நிலுவையில் உள்ளன. அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்படும் என நிபுணர்கள் நம்புகின்றனர். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இது குறித்த அறிவிப்பு வரக்கூடும். 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி..ஒரே நேரத்தில் டிஏ, பதவி உயர்வு! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ