7th Pay Commission: இந்த ஜூலையில் வருகிறது 6% DA உயர்வு!

7வது ஊதியக் குழுவின் படி, 6 சதவீதம் உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ சதவீதம் 40 சதவீதமாக உயரும்.  

Written by - RK Spark | Last Updated : Jul 11, 2022, 12:34 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ சதவீதம் 40 சதவீதமாக உயரும்.
  • ஏப்ரல் 2022 இல் ஏஐசிபிஐ அதன் முந்தைய மதிப்பான 127.7 இல் இருந்து 129 ஆக அதிகரித்துள்ளது.
  • ஜூலை 31 அல்லது மாத இறுதி வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission: இந்த ஜூலையில் வருகிறது 6% DA உயர்வு! title=

ஜூலை மாதத்தில் மத்திய அரசாங்கத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உண்டு என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருந்தது, அதாவது அவர்களுக்கான டிஏ உயர்வு தான் ஜூலை மாதத்தில் வரும் மகிழ்ச்சியான செய்தி என்று கூறப்பட்டது.  இந்நிலையில் அரசு ஊழியர்கள் பலரும் இது ஜூலை மாதம் என்பதால் டிஏ உயர்வு பற்றிய செய்திகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  சமீபத்தில் வெளியான சில ஆதாரங்களின்படி, இந்த முறை திருத்தத்திற்கான எண்ணிக்கை 5% என மதிப்பிடப்பட்டுள்ளது, இதனால் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் இழப்பீட்டில் பெரிய அதிகரிப்பை எதிர்பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | 7th Pay Commission:ஜூலை மாதம் ஊழியர்களுக்கு 3 பம்பர் செய்திகள்

மே மாதத்திற்கான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு, எதிர்பார்த்ததை விட அதிகமான உயர்வைக் காட்டுகிறது.  இது டிஏ மற்றும் டியர்னஸ் ரிலீஃப் (டிஆர்) உயர்வுகளுக்கான தொகையைக் கணக்கிடப் பயன்படுகிறது, சில அறிக்கைகளின்படி 6% அதிகரிப்பும் வரக்கூடும் என்று தெரிகிறது.  7வது ஊதியக் குழுவின் படி, 6 சதவீதம் உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ சதவீதம் 40 சதவீதமாக உயரும்.  மேலும் இந்த அறிவிப்பு குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், இதுபற்றிய தெளிவான அறிவிப்பு ஜூலை 31 அல்லது மாத இறுதி வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்து வரும் செலவின் விளைவுகளை ஈடுகட்ட, மத்திய அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு இருமுறை டிஏ உயர்வைப் பெறுகிறார்கள்.  இந்த ஆண்டின் முதல் டிஏ உயர்வு ஜனவரியில் நடந்ததில் தொடர்ந்து, இரண்டாவது டிஏ உயர்வு ஜூலையில் நிகழ்கிறது.  மே மாதத்தின் டேட்டா படி, ஏப்ரல் 2022 இல் ஏஐசிபிஐ அதன் முந்தைய மதிப்பான 127.7 இல் இருந்து 129 ஆக அதிகரித்துள்ளது, இது 6% டிஏ அதிகரிப்பு பற்றிய பேச்சை அதிகரித்துள்ளது.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3% டிஏ அதிகரிப்பு 31% இல் இருந்து 34% ஆக உயர்த்தப்பட்டது.

2021–2022 நிதியாண்டில், மத்திய அறங்காவலர் குழுவான இபிஎஃப் , உறுப்பினர்களின் கணக்குகளில் இபிஎஃப் 8.10 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தில் வரவு வைக்க பரிந்துரைத்தது.  அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், இபிஎஃப்ஓ ​​உடனடியாக தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வட்டி விகிதத்தை வரவு வைக்கத் தொடங்கியது.  இதற்கிடையில், 18 மாத அகவிலைப்படி (டிஏ) நிலுவை பற்றிய செய்திகள் எழ தொடங்கின.  மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் கணக்கில் நிலுவையில் உள்ள ரூ.1.5 லட்சத்தை ஒரேயடியாகப் பெறுவதை விட்டுவிடக் கூடாது, ஊழியர்களின் ஊதியக் குழு மற்றும் நிறுவன அமைப்பு டிஏ நிலுவைத் தொகையை நிர்ணயிக்கும்.

மேலும் படிக்க | இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய அடி, நாளை முதல் புதிய விதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News