மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்: அகவிலைப்படியுடன் உயரும் பிற கொடுப்பனவுகள்
7th Pay Commission, DA Hike: மார்ச் மாத அகவிலைப்படியைத் தவிர ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும். இதன் பிறகு இந்த மாத சம்பளத்தில் ஊழியர்கள் மிகப்பெரிய தொகையை எதிர்பார்க்கலாம்.
7th Pay Commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிப்பை இந்த மாதம் வெளியிட அரசு தயாராகி வருகிறது. அகவிலைப்படி அதிகரிப்பு தவிர, ஜனவரி முதல் மார்ச் மாதம் மாதம் வரையிலான அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும். இதன் காரணமாக இந்த மாத சம்பளத்தில் பெரிய தொகையை ஊழியர்கள் எதிர்பார்க்கலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) இந்த மாத சம்பளம் வந்தவுடன் அகவிலைப்படி அதிகரிப்புக்குப் பிறகு, அடிப்படை சம்பளம், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) பயணக் கொடுப்பனவு (TA) ஆகிய கொடுப்பனவுகளின் உயர்வை சரி பார்த்துக் கொள்வது நல்லது.
அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. ஜூன் 2023 முதல் டிசம்பர் 2023 வரையிலான குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிப்பு நான்கு சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) 46% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இதில் நான்கு சதவீத உயர்வு ஏற்பட்டால் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 50 சதவீதமாக அதிகரிக்கும்.
மார்ச் மாத அகவிலைப்படியைத் தவிர ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும். இதன் பிறகு இந்த மாத சம்பளத்தில் ஊழியர்கள் மிகப்பெரிய தொகையை எதிர்பார்க்கலாம். இதில் அகவிலைப்படி உயர்வு (DA HIke) மட்டும் அல்லாமல், அரியர் தொகை (DA Arrears), அதிகரித்த அடிப்படை சம்பளம், பயணப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு ஆகியவையும் கிடைக்கும்.
ஊதியக்குழுவின் படி சம்பள கணக்கீடு
ஏழாவது ஊதிய குழுவின் (7th Central Pay Commission) படி, ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மாதத்திற்கு 18,000 ரூபாயாக இருக்கின்றது. இதைத்தவிர ஊழியர்கள் கூடுதல் வரவுகளையும் பெறுகிறார்கள். ஊழியர்களுக்கு ஊதிய குழுவின் படி சம்பளத்தில் ஏற்றம் இருக்கும். உதாரணமாக ஒரு ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் 18,000 ரூபாயாக இருந்தால், அவருக்கு கீழ் உள்ள அட்டவணையின் படி ஊதியம் கிடைக்கும்.
DA Hike Calculator
மாதம் | அடிப்படை ஊதியம் | அகவிலைப்படி | பயணக் கொடுப்பனவு | அரியர் தொகை | சம்பளம் |
ஜனவரி | 18,000 | 8,280 | 1,350 | 720 | 27,630 |
பிப்ரவரி | 18,000 | 8,280 | 1,350 | 720 | 27,630 |
மார்ச் | 18,000 | 9,000 | 1,350 | 1,440 | 29,790 |
ஏப்ரல் | 18,000 | 9,000 | 1,350 | 28,350 |
மேலும் படிக்க | கணவன் - மனைவிக்கிடையே இவ்வளவு தொகைக்கு மேல் அனுப்ப கூடாதா?
அகவிலைப்படி எப்போது திருத்தப்படுகின்றது?
பொதுவாக ஆண்டிற்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி (Dearness Allowance) திருத்தப்படுகிறது. கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. அதேபோல் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாதம் அகவிலைப்படி கணக்கிடப்படுகின்றது. பணவீக்கம் மற்றும் அதிகரிக்கும் விலைகாசியை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்கப்படுகின்றது.
மேலும் படிக்க | EPFO Update: பணி ஓய்வுக்கு முன் பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி? இதற்கான விதிகள் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ