Cash Transaction Rules: இந்தியாவில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும். அப்படி வருமான வரி கட்டவில்லை என்றால் உங்களுக்கு நோடீஸ் வரலாம். வருமான வரித்துறை இந்தியர்களின் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் கண்காணித்து வருகிறது. யார் யார் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகையை பரிவர்த்தனை செய்கின்றனர், வெளிநாட்டில் இருந்து ஏதேனும் பணம் வருகிறதா? முறையாக வருமான வரி செலுத்துகிறார்களா போன்றவற்றை கண்காணிக்கின்றனர். பண பரிவர்த்தனைகளுக்கு ஏதேனும் வரி உள்ளதா? இதற்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புமா?
சொந்தங்களுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம்? கணவன் - மனைவிக்கும் இடையே அல்லது தந்தைக்கும் மகனுக்கும் இடையே எவ்வளவு பண பரிவர்த்தனை செய்யலாம் போன்ற பல கேள்விகள் நமக்குள் இருக்கும். இது பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். அடிக்கடி இணையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் அல்லது கணவன் மனைவிக்கு இடையில் பண பரிமாற்றம் செய்பவராக நீங்கள் இருந்தால் இந்த தகவல் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புமா?
நிதி நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு மாதமும் கணவர் வீட்டு செலவிற்காக மனைவிக்கு பணம் கொடுத்தாலோ, வேறு செலவுகளுக்கு பரிசாக கொடுத்தாலோ மனைவிக்கு வருமான வரி விதிக்கப்படாது. மேற்கூறிய இரண்டு வகையான பரிவர்த்தனைகளும் கணவரின் வருமானமாக கருதப்படும். இந்தத் தொகைக்கு வருமான வரித் துறையிடம் இருந்து மனைவிக்கு எந்த வித நோடீஸும் வராது. ஆனால், மனைவி அந்த பணத்தை வேறு தொழிலில் அல்லது வருமானம் வரும் வகையில் முதலீடு செய்தால் அதற்கு அவர் தனியாக வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். ஒரு ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வருமானம் வந்தால் அதற்கான வரியை செலுத்த வேண்டும்.
வருமான வரியின் 269எஸ்எஸ் மற்றும் 269டி பிரிவின் கீழ் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும், இதற்கு சில சந்தர்ப்பங்களில் தளர்வுகள் உள்ளன. உதாரணமாக, தந்தை-மகன், கணவன்-மனைவி மற்றும் சில நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்கு எந்தவித அபராதமும் இல்லை. இது போன்ற பரிவர்த்தனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு வருமான வரித் துறையிடமிருந்து எந்த நோடீஸும் வராது.
சேமிப்புக் கணக்குகளில் எவ்வளவு டெபாசிட் செய்யலாம்?
ஒரே நேரத்தில் ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை உங்கள் சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்தால், வருமான வரித் துறையின் கவனத்தை ஈர்க்கும்.ஒரு நிதியாண்டில் ரூ. 10 லட்சத்தைத் தாண்டிய ரொக்கமாக டெபாசிட் செய்தால் அதற்கான ஆதாரங்களை தெரிவிக்க வேண்டும். இவை உடனடி ஆய்விற்கு உட்படுத்தப்படும். நீங்கள் அந்த பணத்திற்கான ஆதாரத்தை முறையாக கொடுக்காத பட்சத்தில் நீங்கள் விசாரணைக்கு ஆளாகலாம். உங்களின் விளக்கம் திருப்தியற்றதாகக் கருதப்பட்டாலோ அல்லது உங்கள் வரி வருமானத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டாலோ அபராதங்களைச் சந்திக்க நேரிடும்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச்சில் மெகா அறிவிப்பு: வங்கிக்கணக்கில் பம்பர் வரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ