7வது ஊதியக்குழு, சமீபத்கிய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவற்றை 4 சதவிகிதம் அதிகரித்தது. இதன் மூலம் தற்போது அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 46% ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. அதிகரித்த சம்பளத்துடன், போனஸ் மற்றும் மூன்று மாத அரியர் தொகையும் தீபாவளிக்கு முன் ஊழியர்களுக்கு கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ஊழியர்களுக்கு இன்னும் பல நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. பொதுவாக அகவிலைப்படி அதிகரித்தவுடன் வீட்டு வாடகை கொடுப்பனவும் (House Rent Allowance) அதிகரிக்கும். ஆனால், இதற்கு சில விதிகள் உள்ளன. எச்ஆர்ஏ எப்போது அதிகரிக்கும்? இதற்கான விதி என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 


எச்ஆர்ஏ எப்போது அதிகரிக்கும்


அகவிலைப்படி (Dearness Allowance) தற்போது நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முன் எச்ஆர்ஏ கடைசியாக ஜூலை 2021 இல் திருத்தப்பட்டது. அப்போது அகவிலைப்படி 25 சதவீதத்தைத் தாண்டியபோது எச்ஆர்ஏ 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அப்போது அதன் வரம்பு 24% -இலிருந்து 27% ஆக உயர்ந்தது. இப்போது வீட்டு வாடகை கொடுப்பனவை மீண்டும் அதிகரிப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


எச்.ஆர்.ஏ அதிகரிக்கப்படும் தேதியை அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது


மத்திய அரசு ஊழியர்களுக்கான (Central Government Employees) வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) அகவிலைப்படியின் அடிப்படையில் திருத்தப்படுவதாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது. வீட்டு வாடகை கொடுப்பனவில் X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களின் வகைகள் உள்ளன. நகர வாரியான விகிதங்கள் 27%, 18% மற்றும் 9% ஆக உள்ளது. 2016 ஆம் ஆண்டு அரசாங்கம் வெளியிட்ட குறிப்பாணையின்படி, எச்ஆர்ஏ மற்றும் டிஏ ஆகியவை அவ்வப்போது திருத்தப்படும். எச்ஆர்ஏ -வின் அடுத்த திருத்தம் இப்போது 2024 இல் செய்யப்பட உள்ளது. மேலும் இது 2024 -இன் முதல் மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி அதிரடி: வங்கிகள் இதை செய்யாவிட்டால் தினமும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 இழப்பீடு


அகவிலைப்படி 50% ஆனவுடன் எச்ஆர்ஏ 3 சதவீதம் அதிகரிக்கும்


ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 50% -ஐ எட்டும் என நம்பப்படுகின்றாது. ஏஐசிபிஐ தரவுகளின் போக்கு இதைத்தான் குறிப்பிடுகிறது. வீட்டு வாடகை கொடுப்பனவில் அடுத்த திருத்தம் 3 சதவீதமாக இருக்கும். எச்ஆர்ஏ தற்போதைய அதிகபட்ச விகிதம் 27% -இலிருந்து 30% ஆக அதிகரிக்கும். ஆனால் அகவிலைப்படி ஐம்பது சதவீதத்தை தாண்டும்போது இது நடக்கும். 2024 ஜனவரியில் இது நடக்க அனைத்து சாத்தியங்களும் உள்ளன. டிஏ 50 சதவீதத்தைத் தாண்டியவுடன், எச்ஆர்ஏ விகிதங்கள், 30 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 10 சதவீதமாக அதிகரிக்கப்படும். அகவிலைப்படி 50% -ஐ எட்டியவுடன், 27% ஆக இருந்த X பிரிவு மத்திய பணியாளர்களின் எச்ஆர்ஏ 30% ஆக உயரும். அதேபோல Y பிரிவினருக்கு இது 18% -இலிருந்து 20% ஆகவும், Z பிரிவினருக்கு 9% -இலிருந்து 10% ஆகவும் அதிகரிக்கும். 


அகவிலைப்படி பூஜ்ஜியமானதால் எச்ஆர்ஏ குறைக்கப்பட்டது


7வது ஊதியக்குழு அமலாக்கத்தின் போது, HRA 30, 20 மற்றும் 10 சதவீதத்தில் இருந்து 24, 18 மற்றும் 9 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும் எக்ஸ், ஒய் மற்றும் இசட் ஆகிய மூன்று பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இந்த நேரத்தில் டிஏ (DA) பூஜ்ஜியமாக இருந்தது. அகவிலைபடி 25% ஐ தாண்டும் போது எச்ஆர்ஏ 27% ஆகவும், அகவிலைப்படி 50% ஐ தாண்டும்போது எச்ஆர்ஏ 30% ஆகவும் திருத்தப்படும் என்று அந்த நேரத்தில் DoPT அறிவிப்பில் கூறப்பட்டது.


எச்ஆர்ஏ எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?


எக்ஸ் பிரிவில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரங்களில் பணியமர்த்தப்படும் மத்திய பணியாளர்களுக்கு 27 சதவீதம் எச்ஆர்ஏ கிடைக்கும். அதேசமயம், Y பிரிவு நகரங்களுக்கான எச்ஆர்ஏ 18% ஆகவும் Z பிரிவு நகரங்களுக்கான எச்ஆர்ஏ 9% ஆகவும் இருக்கும்.


மேலும் படிக்க | ஹரியானா மாநிலத்திலும் அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் அரசுப் பணியாளர்கள்! DA 4% ஹைக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ