7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் மத்திய அரசு பணியாளர்களோ அல்லது ஓய்வூதியதாரர்களோ இருக்கிறார்களா? அப்படியென்றால் உங்களுக்கு இன்னும் சில நாட்களில் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு மிக விரைவில் இரண்டு பரிசுகளை ஒன்றாக வழங்க பரிசீலித்து வருகிறது. அகவிலைப்படியுடன் அரசாங்கம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரையும் அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?


மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்து மொத்த அகவிலைப்படி 45 சதவிகிதமாக உயரும் என ஒரு சாரார் கூறி வருகிறார்கள். எனினும், ஜனவரி 2023 முதல் ஜூலை 2023 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களை வைத்து பார்க்கும்போது அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்து மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். எனினும், டிஏ ஹைக் (DA Hike) எவ்வளவு இருக்கும் என்பது அரசின் அறிவிப்பு வந்தவுடன் தான் தெரியவரும். 


அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தால், 


குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ 18,000 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்


ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - மாதம் 18,000 ரூபாய்


புதிய அகவிலைப்படி (46%) - மாதம் ரூ 8280
இதுவரையிலான அகவிலைப்படி (42%) - மாதம் ரூ. 7560
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 8280-7560 = ரூ. 720
ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ.8640


அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ 56,900 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்


ஊழியர்களின் அடிப்படை சம்பளம் = மாதம் ரூ 56,900


புதிய அகவிலைப்படி (46%) = மாதம் ரூ 26,174
இதுவரையிலான அகவிலைப்படி (42%) = மாதம் ரூ. 23,898 
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 26,174-23,898 = ரூ. 2,276 மாதத்திற்கு
ஆண்டு ஊதிய உயர்வு = 2276X12= ரூ. 27,312


மேலும் படிக்க | மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம் மற்றும் வங்கிகளில் வட்டி எது அதிக பலன் தரும்?


ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். பனவீக்கம் மற்றும் விலைவாசியால் அவதிப்படும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகரிப்பு பெரிய நிவாரணத்தை அளிக்கும். இதற்கு முன்னர் மார்ச் மாதத்தில் ஊழியர்களின் டிஏ அதிகரிக்கப்பட்டது. 38% ஆக இருந்த அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு 42% ஆக உயர்ந்தது. தற்போது ஜூலை 2023 -க்கான அகவிலைப்படி உயர்வு தேதி குறித்து அரசு எதுவும் கூறவில்லை. ஆனால் அது தீபாவளிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இரண்டு முறை டிஏ உயர்த்தப்படும்


ஏழாவது ஊதியக் குழுவின் விதிகளின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப் நிவாரணம் (Dearness Relief)ஆண்டுக்கு இரு முறை உயர்த்தப்படுகின்றது. இதன் விகிதங்கள் ஜனவரி மற்றும் ஜூலை முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அரசாங்கம் இப்போது DA ஐ உயர்த்தினால், அதன் விகிதங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். ஜூலை மாதம் முதலான அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும். 


ஃபிட்மென்ட் ஃபாக்டரும் அதிகரிக்கும்


மத்திய அரசு ஊழியர்களின் பிட்மென்ட் பாக்டரை (Fitment Factor) அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது. அதையும் தற்போது அரசு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.60 மடங்குகளிலிருந்து 3.0 மடங்காக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. ஃபிட்மென்ட் ஃபேக்டர் அமல்படுத்தப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில், அதற்கான காத்திருப்பு தற்போது முடிவுக்கு வரும் என தோன்றுகிறது. அந்த வகையில், அகவிலைப்படி அதிகரிப்பு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என இரண்டு பரிசுகளை ஊழியர்கள் விரைவில் பெறக்கூடும். 


மேலும் படிக்க | நலத்திட்டங்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்க தனியார் வங்கிகளுடன் மத்திய அரசு ஆலோசனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ