7வது ஊதியக்கமிஷன் சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி உள்ளது. முன்னதாக அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்திய அரசு, தற்போது வேரியபிள் அகவிலைப்படியையும் உயர்த்தியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு முதலில் நவராத்திரி பரிசாக அகவிலைப்படியில் அதிகரிப்பு கிடைத்தது. அரசு தற்போது தீபாவளி பரிசை வழங்க திட்டமிட்டுள்ளது. ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளத்தில் 4 சதவீத அகவிலைப்படி மற்றும் டி ஏ நிலுவைத் தொகை கிடைத்துள்ளது. தற்போது மத்திய அரசின் மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேரியபிள் அகவிலைப்படியும் உயர்த்தப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணியாளர்களின் வேரியபிள் அதிகரிக்கப்பட்டது


மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய அரசின், மத்திய ஊழியர்களுக்கான (விவசாயம்) வேரியபிள் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இப்போது இந்த மத்திய ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாறுபடும் அகவிலைப்படி (Variable Dearness Allowance) கிடைக்கும். அக்டோபர் 1, 2022 முதல் அரசாங்கத்தின் இந்த முடிவின் பலனை ஊழியர்கள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


தொழிலாளர் அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது


இது தொடர்பான அறிவிப்பை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் ஜனவரி 19, 2017 தேதியிட்ட அறிவிப்பை மனதில் கொண்டு, வேரியபிள் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் எழுதப்பட்டுள்ளது. அறிவிப்பின் நகல் எங்கள் கூட்டாளர் இணையதளமான ஜீ பிசினசிடம் உள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத அரியர் தொகை பற்றிய முக்கிய அப்டேட் 


எந்த வகையில் வேரியபிள் அகவிலைப்படி எவ்வளவு அதிகரித்துள்ளது?



வேரியபிள் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்ட பிறகு, அடிப்படை விலைகள் மற்றும் VDA ஆகியவற்றைச் சேர்த்து, விவசாய ஊழியர்கள் அக்டோபர் 1, 2022 முதல்  பம்பர் லாபத்தைப் பெறுவார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி, நகர வாரியாக VDA வழங்கப்படும்.



குறைந்தபட்ச ஊதிய ஆலோசனைக் குழுவின் முடிவிற்குப் பிறகு, அடுத்த உயர் ரூபாய் கணக்கில் (next higher rupee) VDA கணக்கிடப்படும்.


மேலும் படிக்க | 4% அகவிலைப்படி உயர்வால் ஊழியர்களுக்கு இவ்வளவு நன்மைகளா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ