மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி. அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வந்ததை அடுத்து தற்போது அகவிலைப்படி நிலுவை தொகை பற்றிய அறிவிப்புக்கான தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 18 மாத அரியர் தொகை குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். அமைச்சரவை செயலாளருடனான தொழிற்சங்க கூட்டம் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. எனினும் அமைச்சரவை செயலாளருடனான சந்திப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்று தற்போது கூறுவது கடினம். சமீபத்தில், மத்திய அமைச்சரவை ஊழியர்களின் அகவிலைப்படிக்கு ஒப்புதல் அளித்தது. ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. இம்முறை அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்தது கொரோனா நேய்த்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட அகவிலைபப்டிக்கான அரியர் தொகை பற்றிய அறிவிப்புக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.
அமைச்சரவை செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மத்திய அரசு ஊழியர்களுக்கு அரியர் தொகை வழங்குவதில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான அகவிலைப்படி அரியர் தொகை நிலுவையில் உள்ளது. அகவிலைப்படி அறிவிக்கப்பட்டதில் இருந்து மத்திய ஊழியர் சங்கங்கள் அகவிலைப்படி அரியர் குறித்து அறிவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. சமீபத்தில், ஜே.சி.எம் செயலாளர் கேபினட் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் நிலுவைத் தொகை குறித்து பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் கோரியும், அகவிலைப்படி என்பது ஊழியர்களின் உரிமை என்றும், இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். ஒருமுறை நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என தொழிற்சங்கம் நம்புகிறது.
மேலும் படிக்க | 4% அகவிலைப்படி உயர்வால் ஊழியர்களுக்கு இவ்வளவு நன்மைகளா?
ஊழியர்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்க வாய்ப்புள்ளது?
ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை மிகப்பெரியது. 7 ஆவது ஊதியக் குழுவின் கீழ் மத்திய ஊழியர்கள் நிலுவைத் தொகையைப் பெற்றால், அவர்களுக்கு பெரிய அளவிலான தொகை கிடைக்கிறது. நேஷனல் கவுன்சில் ஆஃப் ஜேசிஎம் (பணியாளர் தரப்பு) ஷிவ் கோபால் மிஸ்ராவின் கூற்றுப்படி, லெவல்-1-ல் உள்ள ஊழியர்களின் நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும். அதே நேரத்தில், லெவல் -13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) மற்றும் லெவல்-14 (ஊதிய அளவு) ஆகியவற்றில் உள்ள ஒரு ஊழியர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ. 2,18,200 வரையிலான நிலுவைத் தொகை கிடைக்கும்.
டி ஏ அரியர் கணக்கீடு எவ்வாறு செய்யப்படும்?
- குறைந்தபட்ச கிரேட் பே ரூ. 1800 (லெவல்-1 அடிப்படை ஊதிய அளவு ரூ.18000 முதல் ரூ.56900 வரை) உள்ள மத்திய ஊழியர்கள் ரூ. 4320 [{18000 இல் 4 சதவீதம்} X 6]-க்காக காத்திருக்கின்றனர்.
- [{ரூ.56900-ன் 4 சதவீதம்}X6] என்ற கணக்கீட்டில் இருக்கும் ஊழியர்கள் ரூ. 13,656 என்ற தொகைக்கு காத்திருக்கிறார்கள்.
- 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச கிரேட் பேவில் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை ரூ. 3,240 [{18,000-ன் 3 சதவீதம்}x6] என்ற அளவில் அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பெறுவார்கள்.
- [{ரூ. 56,9003-ன் 3 சதவீதம்}x6] என்ற கணக்கீட்டில் உள்ளவர்களுக்கு ரூ.10,242 கிடைக்கும்.
- ஜனவரி மற்றும் ஜூலை 2021 க்கு இடைப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையைக் கணக்கிட்டால், அது 4,320 [{ரூ. 18,000-ன் 4 சதவீதம்}x6] ஆக இருக்கும்.
- [{₹56,900-ன் 4 சதவீதம்}x6] என்ற கணக்கீட்டுக்கு தொகை ரூ.13,656 ஆக இருக்கும்.
4320+3240+4320 அடிப்படையில் தொகை கிடைக்கக்கூடும்
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள மேட்ரிக்ஸின் படி குறைந்தபட்ச சம்பளம் ரூ. 18000 எனில், அவர்களுக்கு டிஏ அரியர் தொகையாக ரூ.11,880 (ரூ.4320+3240+4320) கிடைக்கும். 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்பட்டது.
ஜனவரி 2020, ஜூன் 2020, ஜனவரி 2021க்கான அகவிலைப்படியானது கொரோனா காரணமாக முடக்கப்பட்டது. கடந்த ஆண்டு தடை நீக்கப்பட்டபோது, அரசு அகவிலைப்படியை 11 சதவீதம் உயர்த்தியது. ஆனால், அந்த 18 மாத நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இப்போது 18 மாத நிலுவைத் தொகை குறித்து நவம்பர் 18ஆம் தேதி கூட்டம் நடத்தப்படக்கூடும். இந்தக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டால், நிலுவைத் தொகையை அரசு வழங்க வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ