7th Pay Commission: ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாத DA, DR மொத்தமாக கிடைக்குமா..!!!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாத டிஏ மற்றும் டிஆர் (DA, DR ) நிலுவைத் தொகையை ஒரே நேரத்தில் மொத்தமாக வழங்குமாறு ஜே.சி.எம் - பணியாளர்கள் தரப்பு தேசிய கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாத டிஏ மற்றும் டிஆர் (DA, DR ) நிலுவைத் தொகையை ஒரே நேரத்தில் மொத்தமாக வழங்குமாறு ஜே.சி.எம் - பணியாளர்கள் தரப்பு தேசிய கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இந்த செய்தி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே நேரத்தில் மொத்தமாக நிலுவைத் தொகை வழங்குவது குறித்து பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel & Training - DoPT) மற்றும் நிதி அமைச்சகத்தின் (செலவுத் துறை) அதிகாரிகளுடன் அண்மையில் நடந்த சந்திப்பில், மூன்று தவணை டிஏ மற்றும் டிஆர் (Dearness Allowance -DA and Dearness Relief-DR) நிலுவைத் தொகையை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மொத்தமாக வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.
அவர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புக் கொண்டால், சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் இது ஒரு பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.
ALSO READ | பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம்: ₹4,000 பெற இன்றே பதிவு செய்யுங்கள்
அதிகாரிகள் இந்த கோரிக்கை குறித்து எந்த வித பதிலும் அளிக்கவில்லை என்றாலும், தேசிய கவுன்சில் இதற்கு அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
2020 மார்ச் மாதம், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அதிகரிக்கப்பட்ட டி.ஏ., மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் 2020 ஏப்ரல் சேர்க்கப்படும் என்று பதிலளித்திருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பொது முடக்கம் அமல்பட்டுத்தப்பட்டு இடையில் இது வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது மற்றும் ஜூன் 2021 வரை டிஏ மற்றும் டிஆரை (Dearness Allowance -DA and Dearness Relief-DR) நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR