மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 4 ஜாக்பாட் செய்திகள்: அதிரடியாய் உயரும் சம்பளம்
7th Pay Commission: புதிய ஆண்டு துவங்கியுள்ள நிலையில், மோடி அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு சில ஆச்சரியங்களை அளிக்கலாம். இதனால் ஏராளமான ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.
7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே பல நல்ல செய்திகள் கிடைத்து வருகின்றன. தற்போது புதிய ஆண்டு துவங்கியுள்ள நிலையில், மோடி அரசு அவர்களுக்கு மேலும் சில ஆச்சரியங்களை அளிக்கலாம். இதனால் ஏராளமான ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள். அகவிலைப்படி உயர்வு, வீட்டு வாடகை கொடுப்பனவு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஆகியவற்றுக்கு இடையில் மத்திய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி அரியர் தொகையை அரசு வழங்குவது குறித்த விவாதமும் வேகமாக நடந்து வருகிறது.
அகவிலைப்படி அரியர் தொகை
அரசாங்கம் இந்த நிலுவைத் தொகையை அளித்தால் அது ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். கொரோனா காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அப்போது ஏற்பட்ட பண நெருக்கடியை ஈடு செய்ய மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படியை முடக்கி வைத்தது. நிலைமை சற்று சீரானவுடன் அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டது. ஆனால் டிஏ (DA) முடக்கப்பட்ட காலத்திற்கான அரியர் தொகை (DA Arrears) இன்னும் வழங்கப்படவில்லை. 2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான டிஏ அரியர் தொகையை வழங்க வேண்டும் என ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது நடந்தால், உயர்மட்ட ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் வரவு வைக்கப்படும் என கருதப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை ஜூலை 2023 -இல் மத்திய அரசு 4 சதவிகிதம் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து தற்போது ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் 46 சதவிகிதமாக உள்ளன. தற்பொது ஜனவரி 2024 முதலான அகவிலைப்படி உயர்வு 4 சதவிகிதம் இருக்கும் என நம்பப்படுகின்றது. இதுவரை வெளிவந்துள்ள ஏஐசிபிஐ குறியீடுகள் (AICPI Index) மூலம் இதை கணிக்க முடிகின்றது. டிஏ 4 சதவிகிதம் அதிகரித்தால், அதன் பிறகு மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும்.
50 சதவிகித அகவிலைப்படி
7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் படி, அகவிலைபப்டி 50% -ஐ எட்டினால், அது பூஜ்ஜியமாக்கப்பட்டு, அகவிலைபடி தொகை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கபப்டும். அதன் படி ஜனவரி முதல் அகவிலைப்படி (Dearness Allowance) 50 சதவிகிதமானால், அதன் பின்னர் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். வழக்கமாக ஒரு ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூலை என 2 முறை அகவிலைப்படி விகிதங்கள் திருத்தப்படுகின்றன.
மேலும் படிக்க | Crypto Currency: கிரிப்டோமேனியா உலகிற்கு நல்லதல்ல: RBI கவர்னர்
வீட்டு வாடகை கொடுப்பனவு
அகவிலைப்படி உயர்வுடன், ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவையும் (House Rent Allowance) 3% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், நிதித்துறையின் குறிப்பாணையின்படி, டிஏ (DA) 50% ஐ தாண்டும்போது HRA அதிகரிக்கப்படும். தற்போது மத்திய arasu ஊழியர்களுக்கு 46% டிஏ வழங்கப்படுகிறது. ஊழியர்களின் அதிகபட்ச HRA 27% ஆக உள்ளது. ஜனவரியில் அகவிலைப்படியில் 4% அதிகரிப்பு இருக்கலாம். அதன் பிறகு அது 50% ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் HRA மேலும் 3% அதிகரிக்கும். அதன் பிறகு அதிகபட்ச HRA 27% -லிருந்து 30% ஆக அதிகரிக்கும்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர்
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மோடி அரசாங்கம் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) குறித்த பெரிய முடிவை எடுக்கக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆகவும், அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயாகவும் உள்ளது. இதை அரசு 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது நடந்தால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை காணலாம்.
மேலும் படிக்க | வீட்டுக் கடனில் இருந்து சீக்கிரம் விடுபட்டு நிம்மதியாக இருக்க... சில எளிய டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ