Crypto Currency: கிரிப்டோமேனியா உலகிற்கு நல்லதல்ல: RBI கவர்னர்

கிரிப்டோகரன்சி குறித்த தனது நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கி ஆளுநர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். கிரிப்டோகரன்சி விதிகளில் மத்திய வங்கி மற்ற நாடுகளை பின்பற்றாது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று தெரிவித்தார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 11, 2024, 06:51 PM IST
Crypto Currency: கிரிப்டோமேனியா உலகிற்கு  நல்லதல்ல: RBI கவர்னர் title=

இந்தியாவில் வசிக்கும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு மோசமான செய்தி உள்ளது. கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது குறித்து பட்ஜெட்டின் போது அல்லது அதற்குப் பிறகு ஏதேனும் நிவாரணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். கிரிப்டோகரன்சி குறித்த தனது நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கி ஆளுநர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். கிரிப்டோகரன்சி விதிகளில் மத்திய வங்கி மற்ற நாடுகளை பின்பற்றாது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று தெரிவித்தார்.

கிரிப்டோமேனியா

வளர்ந்து வரும் சந்தைகளும் உலகமும் 'கிரிப்டோமேனியா கிரிப்டோ மோகத்தை' சமாளிக்க முடியாது என்று அவர் கூறினார். மற்ற சந்தைகளுக்கு நல்லதாக இருப்பது என்பது நமக்கு நன்மை தரும் என்பதல்ல என்று தாஸ் கூறினார். எனவே, கிரிப்டோ கரன்ஸி தொடர்பான இந்தியாவின் கருத்துக்களில் மாற்றம் ஏதும் இல்லை. ரிசர்வ் வங்கி மற்றும் தனிப்பட்ட முறையில் கருத்துகளில் மாற்றம் ஏதும் இல்லை என  கூறியதன் மூலம், எதிர்காலத்தில் இந்தியாவிலும் கிரிப்டோகரன்சியில் எந்த நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை என்பதே இதன் பொருள்.

அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட பிட்காயின்

Bitcoin Exchange Traded Fund (ETF) அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த தாஸ், வங்கிகள் மற்றும் கிரிப்டோகரன்சி மீதான இந்தியாவில் நிலைப்பாடு மாறாது என்று கூறினார். வணிக நாளிதழான 'மிண்ட்' இங்கு ஏற்பாடு செய்த நிதித்துறை கருத்தரங்கில் உரையாற்றிய ரிசர்வ் வங்கி கவர்னர், வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்கள் மற்றும் மேம்பட்ட பொருளாதாரங்களுக்கு, கிரிப்டோ கரன்சியின் பாதையில் இறங்குவது பல அபாயங்களைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று கூறினார். கிரிப்டோ கரன்சி தொடர்பான அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து கேட்டபோது, ​​தாஸ், 'நீங்கள் ஏன் அந்த வழியில் செல்ல விரும்புகிறீர்கள் என்பதுதான் கேள்வி? நீங்கள் என்ன பெறப் போகிறீர்கள்?'

மற்ற நாடுகளில் நிலைப்பாடு குறித்து கருத்து இல்லை

வெளிநாடுகளின் நிதி கட்டுப்பாட்டாளர் என்ன செய்தார்கள் என்பது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை என்றார். தங்கள் நாட்டுக்கு எது சிறந்தது என்று அவர்களுக்குத் தெரியும், ஆனால் கிரிப்டோ முதலீடுகளில் உள்ள அபாயங்களை அவர்கள் கண்டறிந்து, மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த கால சாதனையை கருத்தில் கொண்டு அவர் கூறினார். தற்போதைய அரசாங்கத்தின், இடைக்கால பட்ஜெட் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்று தான் நினைக்கவில்லை என கூறினார். ரஷ்ய-உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த சப்ளை தொடர்பான பல நடவடிக்கைகளை ஆளுநர் குறிப்பிட்டார்.

கிரிப்டோகரன்சி முதலீடு 

"கிரிப்டோ" அல்லது "டோக்கன்" என்றும் அழைக்கப்படும் கிரிப்டோகரன்சியில் உலகெங்கிலும் உள்ள ஏராளமானோர் பெரும் தொகையை முதலீடு செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் ஒழுங்குமுறைக்காக காத்திருக்கின்றனர்.

கிரிப்டோ சந்தை

கிரிப்டோ சந்தை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சந்தையில் ஆயிரக்கணக்கான கிரிப்டோகரன்சிகள் இருந்தாலும். Bitcoin மற்றும் Ethereum ஆகியவை Cryptocurrency சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. கிரிப்டோ சந்தையில், Ethereum மற்றும் Bitcoin இன் சந்தை மூலதனம் மூன்றில் இரண்டு பங்கைவிட அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க | 2023ல் அதிகம் புழங்கப்பட்ட கிரிப்டோ கரன்சிகள்! லிஸ்ட்டில் இடம் பெற்ற டிஜிட்டல் பணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News