8th Pay commission: இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படியை உயர்த்துவது தவிர, 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது குறித்த பெரிய முடிவையும் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மத்திய அரசு 8-வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும், இதன் காரணமாகவே ஊழியர்கள் பலரும் அரசு எப்போது 8வது ஊதியக்குழு பற்றிய செய்தியினை வெளியிடும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  பொதுவாக, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறை ஊதியக்குழு அமைக்கப்படுகிறது, இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு கிடைக்கும்.  இந்த மாதிரியான கமிஷன் அமைக்கப்பட்டதன் மூலம், பல்வேறு சூழ்நிலைகளில் பணிபுரியும் மத்திய ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி, பணிக்கு ஏற்றவாறு அலவன்ஸ் நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசு ஊழியர் அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்... 7ஆவது ஊதியக்குழுவின் கீழ் சம்பள உயர்வு - அறிவிப்பை வெளியிட்ட அரசு!


கடந்த சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகும், குறைந்தபட்ச ஊதியம் குறித்த அதிருப்தி பல ஊழியர்களிடையே இருந்தது.  அதிருப்தியடைந்த ஊழியர்களும் தங்கள் கோரிக்கைகளை அரசிடம் வைக்க முயற்சி செய்து அது வெற்றிபெறவில்லை.  7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதன் மூலம், நரேந்திர மோடி அரசு எம்ஏசிபியை ஏற்றுக்கொண்டது தான் ஊழியர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை. இந்த ஊதியக்குழு மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு ஊழியர்களுக்கு அதிருப்தியை தான் ஏற்படுத்தியது என்பது மறுக்கமுடியாத உண்மை.  7வது ஊதியக் குழுவிற்கு முன், ரூ.7000 குறைந்தபட்ச ஊதியமாக இருந்தது, அமல்படுத்தப்பட்ட பின்னர் ரூ.18000 ஆக இருந்தது.  அதன்பின்னர் ஊழியர்கள் இந்த தொகையை ரூ. 26000ஆக உயர்த்த கோரிக்கை வைத்து வந்தனர்.  சில நாட்கள் கழித்து அதை ரூ.21000 ஆக உயர்த்த அரசு ஒப்புக்கொண்டது ஆனால் ஊழியர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.


​​7வது ஊதியக்குழு அமலுக்கு வந்ததில் இருந்து, மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அதன் பரிந்துரைகளின்படி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.  7-வது ஊதியக் குழு பிப்ரவரி 28, 2014 முதல் தொடங்கப்பட்டது, இந்த ஆணையத்தின் தலைவராக நீதிபதி ஏ.கே. மாத்தூர் நியமிக்கப்பட்டார்.  7வது ஊதியக்குழு ஜனவரி 1, 2016 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது, இதை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி 29 ஜூன் 2016 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்தார்.  இன்றுவரை அரசு ஊழியர்கள் பலரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு டிஏ ஹைக் பற்றிய மாஸ் செய்தி, இன்று வருகிறதா அறிவிப்பு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ