இந்த இலைகளை சாப்பிட்டால் ஹெல்தியான வாழ்க்கை உறுதி... ஆனால் ஒரு கண்டிஷன்!

Healthy Morning Habits: காலையில் எழுந்து வெறும் வயிற்றில் இந்த 5 இலைகளை நீங்கள் சாப்பிட்டாலே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 21, 2024, 06:43 AM IST
  • காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது அவசியம்
  • ஊட்டச்சத்துக்களை உடல் முழுமையாக எடுத்துக்கொள்ளும்.
  • இவை உங்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடியவை ஆகும்.
இந்த இலைகளை சாப்பிட்டால் ஹெல்தியான வாழ்க்கை உறுதி... ஆனால் ஒரு கண்டிஷன்! title=

Healthy Morning Habits: மூலிகை இலைகள் எப்போதுமே உடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியவை. நமது வீட்டுவைத்தியங்களில் மூலிகலை இலைகளுக்கு என தனியிடம் இருக்கிறது. மக்கள் தங்களின் அருகாமையில் அன்றாடம் காணும் இலை,  தளைகளை தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு அடிக்கடி சாப்பிடுவார்கள். அதுவும் வீட்டின் அருகில் வளர்ந்த மூலிகைகள் குறித்த புரிதலும் முந்தைய காலத்தில் அதிகம் இருந்தன.

அந்த வகையில், நீங்கள் இந்த இலைகளை காலையில் அதுவும் வெறும் வயிற்றில் உண்டால் உடல் ஆரோக்கியம் சிறக்கும். காரணம் இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ், கனிமங்கள், வைட்டமிண்கள் நிறைந்திருக்கின்றன. எனவே, உங்களின் அன்றாட வாழ்க்கைக்கு இந்த இலைகள் நிச்சயம் பயனளிக்கும். குறிப்பாக உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், உடலுக்கு ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது, செரிமான அமைப்பை சீராக்குவது போன்றவற்றிலும் உதவும்.

இதை ஏன் காலையில், அதுவும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என கேட்டீர்கள் என்றால், அந்த சமயத்தில்தான் வயிற்றில் வேறு உணவுப்பொருள்கள் ஏதும் இருக்காது. அந்த சமயத்தில் இதை சாப்பிடும்போது இதன் ஊட்டச்சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்சி எடுக்கும். மேலும், இதனால் உங்களின் வளர்ச்சிதை மாற்றம் நாள் முழுக்க தீவிரமாக இருக்கும். இந்நிலையில், உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு இந்த 5 இலைகளை நீங்கள் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க | பைல்ஸ் பிரச்சனை 8 நாட்களில் குணமாக சூப்பரான டிப்ஸ்..!

துளசி

இதனை நீங்கள் உங்களின் வீட்டின் முற்றத்திலேயே வளர்க்கலாம். காலையில் எழுந்த உடன் சில துளசி இலைகளை நன்கு கழுவி வாயில் போட்டு மெல்லுங்கள். இதில் பைட்டோகெமிக்கல்ஸ், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சாறுகள், ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் ஆகியவை இருக்கும். துளசியை காலையிலேயே சாப்பிடுவதால் செரிமானம் சீராகி, ரத்த சர்க்கரை அளவு சமநிலையை அடையும். உடலின் நச்சுக்களும் வெளியேறும்.

முருங்கை இலை

இதுவும் உங்களின் வீட்டின் அருகிலேயே கிடைக்கும். முருங்கை மரத்தில் இருந்து இலைகளை பறித்துக்கொள்ளலாம். முருங்கை இலை பொடிகளும் கடைகளில் கிடைக்கிறது என்றாலும் இலைகளை நேரடியாக கழுவி உட்கொள்வது சிறந்தது எனலாம். இதில் உள்ள வைட்டமிண்கள், சில ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ், கனிமங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கும். செரிமானம் சீராகி, உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் காணும். வளர்ச்சிதை மாற்றமும் தீவிரமாகும்.

புதினா இலைகள்

இது வயிற்றுக்கு இதமளிக்கக் கூடிய ஒன்றாகும். செரிமான பிரச்னைகளை தீர்க்கும். குமட்டல் மற்றும் வயிற்றில் உப்புசம் ஆகியவை பிரச்னைக்கு தீர்வாகவும் அமையும். இதில் அதிக ஆண்டிஆக்ஸிடன்ஸ்ட் உள்ளன. இது உடலுக்கு குளிர்ச்சியை தரும், வாயில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடி, நறுமணத்தை வழங்கக்கூடியது.

கீரைகள்

உங்களின் வீட்டுத் தோட்டங்களில் அல்லது சந்தைகளில் கிடைக்கக் கூடிய சில கீரைகளை வாங்கி அவற்றை ஆரோக்கியமான முறையில் சமைத்து உண்ணுங்கள். இதில் இரும்புச்சத்து, ஃபோலேட், கால்சியம், வைட்டமணி K, A, C ஆகியவை உள்ளன.

கறுவேப்பிலை

இது உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், செரிமானத்தை சீராக்குவதிலும் அதிகம் உதவும். குறிப்பாக கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நீரிழிவு நோய் இருப்பவர்கள் இதனை நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம், இதில் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் பண்புகள் உள்ளன.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் வீட்டு வைத்தியங்கள், பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | குளிர்காலத்தில் தொப்பையை துரத்தி அடிக்கும் 3 சூப்பரான பழங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News