மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி? 8வது சம்பள கமிஷன்..முக்கிய அப்டேட்
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் 8வது ஊதியக்குழு அமைப்பது குறித்து அரசு அறிவிக்கலாம் என ஊழியர் அமைப்புகள் எதிர்பார்த்துள்ளன.
8 வது ஊதியக்குழு, சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. 7வது ஊதியக் குழுவுக்குப் பிறகு 8வது ஊதியக் குழுவை அமல்படுத்தக் கோரி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் தொடர்பான நல்ல செய்தி கிடைக்குமா என்ற விவாதம் இப்போது தீவிரமடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் நாட்டில் மககளவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்கு முன் மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் 8வது ஊதியக்குழு அமைப்பது குறித்து அரசு அறிவிக்கலாம் என ஊழியர் அமைப்புகள் எதிர்பார்த்துள்ளன. ஆனால் இது தொடர்பாக அரசு ஏற்கனவே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.
8th Pay Commission: அரசாங்கம் கூறியது என்ன?
சுமார் 48.67 லட்சம் மத்திய ஊழியர்கள் மற்றும் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு 8வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் குறித்து அரசாங்கத்திடம் இருந்து கிடைத்துள்ள குறிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உண்மையில், மழைக்கால கூட்டத்தொடரின் போது, எட்டாவது ஊதியக் குழுவை உருவாக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
அப்போது நிதித்துறை செயலாளர் டி.வி. சோம்நாத்திடம் (TV Somanathan), மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது மத்திய ஊதியக் குழுவை 2026 ஜனவரி 1-ஆம் தேதி அமல்படுத்தும் வகையில், உரிய நேரத்தில் அமைக்கப்படுவதை உறுதி செய்ய அரசு முன்மொழிகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த நிதிச் செயலர், தற்போதைக்கு 8 வது ஊதியக்கமிஷன் அமைப்பது பற்றிய சிந்தனை அரசுக்கு இல்லை என பதிலளித்தார்.
எனினும், அரசின் இந்த நிலைப்பாடு விரைவில் மாறக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சில வலுவான காரணங்களும் உள்ளன. ஜனவரியில் அகவிலைப்படி அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் படி அகவிலைப்படி 50% -ஐ எட்டினால், அகவிலைப்படி 0% ஆக்கப்பட்டு 50% அகவிலைப்படி (Dearness Allowance) தொகை அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அந்த நிலையில், ஊதிய திருத்தம் இருக்கும். ஊதிய திருத்தம் ஏற்பட அடுத்த ஊதியக் கமிஷனை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
2013 பொதுத் தேர்தலுக்கு முன் 7வது ஊதியக் குழுவின் உருவாக்கம்
முன்னதாக, 2013 பொதுத் தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் 7வது ஊதியக் குழுவை அமைத்தது. அடுத்த ஆண்டு, 2024ல், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், எட்டாவது ஊதியக் குழு அமலாக்கம் குறித்து பல யூகங்கள் எழுந்தன.
நாட்டில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) சம்பள கட்டமைப்பை மாற்ற 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1947 முதல் 7 ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன
நாட்டின் முதல் ஊதியக் குழு ஜனவரி 1946 இல் உருவாக்கப்பட்டது. 1947 முதல், 7 ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46% ஆக உயர்வு
7வது ஊதியக்குழுவின் கீழ், ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000. 7வது மத்திய ஊதியக் குழுவின் படி, சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) 42% இல் இருந்து 46% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட விகிதம் ஜூலை 1, 2023 முதல் பொருந்தும்.
மேலு படிக்க | பங்குச் சந்தையில் உச்சத்தை எட்டும் அதானியின் குழுமம்! பசுமை எரியாற்றலுக்கு ஜே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ