7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: வரும் புத்தாண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்களுக்கு புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இருப்பினும், இதற்கு மார்ச் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், 10 நாட்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி, அவர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும் என வட்டாரங்காள் தெரிவிக்கின்றன. ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் டிசம்பர் 31க்குள் வெளியிடப்படும். இது ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பதை சுட்டிக்காட்டும் தரவுகளுடன் வரும்.
தற்போது வரை வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி 49 சதவீதத்தை எட்டியுள்ளது. அக்டோபர் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களை அடிப்படையாகக் கொண்டது. நவம்பர் எண்கள் 10 நாட்களுக்குப் பிறகு வெளியிடப்படும்.
இதுவரை ஏஐசிபிஐ குறியீட்டு எண் எவ்வளவு எட்டியுள்ளது?
அக்டோபர் 2023 க்குள் AICPI குறியீட்டு எண் 138.4 புள்ளிகளை எட்டியுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 0.9 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படியின் மொத்த மதிப்பெண் 49.08 சதவீதத்தை எட்டியுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உணவுப் பணவீக்கம் காரணமாக குறியீட்டெண் உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதை ரிசர்வ் வங்கி கவர்னரும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அகவிலைப்படியில் மேலும் 1.50 சதவீதம் அதிகரிப்பு ஏற்படும் என நம்பப்படுகின்றது.
அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? 4 சதவிகிதமா அல்லது 5 சதவிகிதமா?
ஜனவரி 2024 இல், அகவிலைப்படி 4 அல்லது 5 சதவீதம் அதிகரிக்கலாம். இதுவரையிலான எண்ணிக்கையைக் கணக்கிட்டால், அகவிலைப்படி (Dearness Allowance) குறைந்தபட்சம் 4 சதவீதம் அதிகரிக்கும் என்பது உறுதி. ஆனால், நவம்பர் மற்றும் டிசம்பரில் குறியீட்டில் ஏற்றம் இருந்தால், டிஏ ஹைக் (DA Hike) 5 சதவிகிதமாகக் கூட இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். தற்போதைய ஏஐசிபிஐ போக்கின்படி, அகவிலைப்படி 51 சதவீதத்தை எட்டும். இது நடந்தால், அகவிலைப்படியில் 5 சதவீத ஏற்றம் இருக்கும். 5 சதவிகித உயர்வு இருந்தால் மொத்த அகவிலைப்படி 51 சதவிகிதமாகவும், 4 சதவுகித உயர்வு இருந்தால் மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதமாகவும் அதிகரிக்கும்.
அகவிலைப்படி 49% தாண்டியது
இதுவரை, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான எண்கள் ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறியீட்டு எண் 138.4 புள்ளிகளில் உள்ளது. இதிலிருந்து கணக்கிடப்பட்ட அகவிலைப்படியின் மதிப்பெண் 49.08 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை நவம்பரில் 50 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, டிசம்பரில் குறியீட்டு எண் 0.54 புள்ளிகள் அதிகரித்தால், அகவிலைப்படி 51 சதவீதத்தை எட்டும். டிசம்பர் 2023 AICPI குறியீட்டு எண்கள் இறுதி அகவிலைப்படி எண்களைத் தீர்மானிக்கும்.
டிஏ உயர்வு அதிகமாக இருக்கும்
அகவிலைப்படி கால்குலேட்டர் (DA calculator) மீதமுள்ள மாதங்களில் அகவிலைப்படி 51 சதவீதத்தை எட்டும் என்பதைக் குறிக்கிறது.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்துகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் இந்த அதிகரிப்பு அமலுக்கு வருகிறது. சில நாட்களுக்குப் பிறகு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரியில் அல்லது மார்ச் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. இதற்கு முன், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை (DA Hike) அறிவிக்கலாம், இதன் மூலம் ஏராளமானோர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ