அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு! எப்போது இருந்து தெரியுமா?
8th Pay Commission: 7-வது ஊதியக்குழுவிற்கு பதிலாக 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட இருப்பதாக சில செய்திகள் வெளியாகி ஊழியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
8th Pay Commission: கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு குறித்து செய்திகள் எப்போது வெளியாகும் என்று காத்துக்கொண்டிருக்கும் நிலையில், 7-வது ஊதியக்குழுவிற்கு பதிலாக 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட இருப்பதாக சில செய்திகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 7-வது ஊதியக்குழுவிற்கு பதிலாக அரசு 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வரும் பட்சத்தில், தற்போது வெளியாகியுள்ள செய்தி மத்திய அரசு ஊழியர்களிடையே மீண்டும் 8-வது ஊதியக்குழு பற்றிய எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது. பொதுவாக அரசு ஊழியர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழு விதிகள் மாற்றப்படுகின்றன. இதற்கு முன்னர் 5-வது ஊதியக்குழு, 6-வது ஊதியக்குழு மற்றும் 7-வது ஊதியக் குழு போன்றவை நிறுவப்பட்டபோதும் இதே முறை தான் கடைபிடிக்கப்பட்டது.
மேலும் படிக்க | Jackpot! உங்கள் தலை எழுத்தை மாற்றும் ‘இந்த’ பிங்க் நிற 20 ரூபாய் நோட்டு!
சமீபகாலமாகவே பல்வேறு ஊடகங்களில் மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் 8-வது ஊதியக்குழு செயல்படுத்துவது குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. 8-வது ஊதியக் குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், மத்திய அரசு அதற்கான பணிகளைத் தொடங்கி 2024-ம் ஆண்டில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. 8-வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பை மத்திய அரசு மக்களவைக்கு முன்னதாக வெளியிடலாம் என்று சில அறிக்கைகள் கூறுகிறது. 2024-ம் ஆண்டு லோக் சபா தேர்தலுக்கு முன்பே லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வெளியிடக்கூடும் என்றும், தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய ஆட்சி அமைந்த பிறகு இது தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
8வது ஊதியக்குழு பற்றி வெளியான செய்திகள் உண்மையாகும் பட்சத்தில், 2024ம் ஆண்டின் இறுதிக்குள் 7வது ஊதியக் குழுவிற்குப் பதில் 8-வது ஊதியக் குழு அமல்படுத்தப்படலாம். இது நடைமுறைப்படுத்தப்பட்டால், 2026ஆம் ஆண்டுக்குள் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும். 8வது ஊதியக் குழுவின் மூலமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரியளவில் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும் என்று கூறப்படுகிறது. 8வது ஊதியக்குழு தவிர, மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் சில வாரங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த அதிரடியான செய்தி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 4% இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ