செல்ல மகள்களுக்கு ஜாக்பாட், புதிய திட்டம் அறிவிப்பு - 80,000 ரூபாய் கிடைக்கும்

Government Scheme For Girl Child: நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் மகள்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மகள்கள் தொடர்பாக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இப்போது உங்கள் வீட்டில் மகள் இருந்தால் ரூ.5000 கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 13, 2023, 07:15 AM IST
  • மகாராஷ்டிரா மாநிலத்தின் மகள்களுக்காக சிறப்பு திட்டம்.
  • இத்திட்டத்தில் மகளுக்கு ரூ.75,000 நிதியுதவி கிடைக்கும்.
  • பெண் குழந்தை பிறந்தால் 5000 ரூபாய் வழங்கப்படும்.
செல்ல மகள்களுக்கு ஜாக்பாட், புதிய திட்டம் அறிவிப்பு - 80,000 ரூபாய் கிடைக்கும் title=

பெண் குழந்தைகளுக்கான அரசு திட்டம்: நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் மகள்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மகள்கள் தொடர்பாக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி தற்போது உங்கள் வீட்டில் மகள் இருந்தால் அவர்களுக்கு ரூ.5000 கிடைக்கும். இதனுடன், உங்கள் மகளுக்கு 18 வயதாகும் போது, ​​அரசு உங்களுக்கு ரூ.75,000 வரை தரும். வாருங்கள் இப்போது நாம் அரசின் இந்த திட்டத்தால் யாருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மகள்களுக்கு 75,000 ரூபாய் கிடைக்கும்
மகாராஷ்டிரா மாநிலத்தின் மகள்களுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை மகாராஷ்டிர அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் மகளுக்கு ரூ.75,000 நிதியுதவி கிடைக்கும். மகாராஷ்டிரா அரசு 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் லேகி லட்கி திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதில், பெண் குழந்தை பிறந்த 18 ஆண்டுகளுக்கு நிதி உதவி கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரயில் முன்பதிவில் AI தொழில்நுட்பம்..! பயணிகளுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்

நிதி உதவி பெறுவது எப்படி-
>> லேகி லட்கி யோஜனா திட்டத்தின் கீழ், பெண் குழந்தை பிறந்தால் 5000 ரூபாய் வழங்கப்படும்.
>> இதற்குப் பிறகு, உங்கள் மகள் முதல் வகுப்பில் படிக்கும் போது, ​​அவர்களுக்கு 4000 ரூபாய் கிடைக்கும்.
>> மறுபுறம், உங்கள் மகள் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, 6000 ரூபாய் கிடைக்கும்.
>> 11ம் வகுப்பில் 8000 ரூபாய் வழங்கப்படும்.
>> 18 வயது அடந்த பிறகு, மகாராஷ்டிர அரசிடமிருந்து 75 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

யாருக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்கும்?
மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ரேஷன் கார்டு உள்ளவர்கள் மட்டுமே மகாராஷ்டிரா அரசின் இந்தத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள். பெண் குழந்தைகளின் கல்விக்காக அரசு இந்த நிதியுதவியை வழங்கி வருகிறது. இதில், பெண் குழந்தை பிறந்தது முதல் 18 வயது வரை மாநில அரசின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் சிறப்பு என்ன -
>> இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் உங்களின் மகள் பிறந்திருக்க வேண்டும்.
>> மகாராஷ்டிரா அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த குடும்பங்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
>> இத்திட்டத்தில் பயன்பெற, பெண்ணின் பெற்றோர் வங்கிக் கணக்கு வைத்திருப்பது அவசியம்.

என்ன ஆவணங்கள் தேவைப்படும்
இத்திட்டத்தில் பயன்பெற, பெற்றோரின் ஆதார் அட்டை, பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மொபைல் எண், வங்கிக் கணக்கு பாஸ்புக், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | ஏசியை தாராளமாக பயன்படுத்தலாம்! மின்சார பில் ஷாக் அடிக்காமல் இருக்க சில டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News