டெல்லி: நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை தொலைத்துவிட்டால், அதை எவ்வாறு எளிதாக மீட்டெடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் ஆதார் அட்டை தொலைத்துவிட்டால் என்ன செய்வது
Aadhaar அட்டை தொலைந்து போகும்போது, ​​அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஆதார் அட்டையை (Aadhaar Card) எளிதில் மீட்டெடுக்கும் செயல்முறையை நாங்கள் உங்களுக்கு கூறப்போகிறோம். இந்த செயல்முறையின் மூலம், வீட்டில் அமர்ந்த படி உங்கள் ஆதார் எண்ணை எளிதாக அறிந்து கொள்ளலாம்.


ALSO READ | உங்களிடம் ரேஷன் கார்டு இருக்கா?.. அப்போ உங்களுக்கு ₹.2500 பணம் கிடைக்கும்..!


ஆதார் எண்ணை மீண்டும் அறிய செயல்முறை
* முதலில், நீங்கள் ஆதார் தொடர்பான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் https://uidai.gov.in பார்வையிடவும்
* Website ஐ திறந்த பிறகு, Homepage இல் My Aadhaar விருப்பத்திற்குச் செல்லவும்
* List வடிவமைப்பில் பல விருப்பங்கள் தோன்றும்
* அதே List இல், ஆதார் சேவை நெடுவரிசைக்குச் சென்று Retrieve Lost or Forgotten EID / UID என்பதைக் கிளிக் செய்க.
* கிளிக் செய்யும் போது, ​​ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் உங்களுக்கு EID அல்லது UID இன் கீழ் இரண்டு விருப்பங்கள் இருக்கும்.
* நீங்கள் விரும்பும் எந்த எண்ணையும் தேர்ந்தெடுக்கவும்.
* இதற்குப் பிறகு உங்கள் முழு பெயர், மொபைல் எண் மற்றும் email ID ஐ உள்ளிடவும்
* இதற்கு பிறகு திரையில் தெரியும் Captcha என்பதை Type செய்யவும்
* Send OTP விருப்பத்தை கிளிக் செய்யவும்
* பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP கிடைக்கும்
* OTP ஐ சமர்ப்பித்த பிறகு, உங்கள் EID அல்லது UID எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் வரும்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR