பான்-ஆதார் இணைப்பு மற்றும் அதிக இபிஎஃப்ஓ ​​ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது, இதனால் குடிமக்களுக்கு நடைமுறைகளை முடிக்க அதிக நேரம் கொடுக்கப்பட்டது. பான் எண்ணை ஆதாருடன் இணைக்கத் தவறினால் உங்கள் பான் செயலிழந்துவிடும்.  மறுபுறம் அதிக இபிஎஃப்ஓ ஓய்வூதிய வசதி, ஓய்வுக்குப் பிறகு அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்களுக்கானது.  மத்திய அரசு இந்திய குடிமகன்களை ஆதாருடன் பான் கார்டை இணைக்க வலியுறுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே.  கடந்த ஆண்டிலிருந்து மக்களை ஆதாருடன் பான் கார்டை இணைக்கக்கோரி அரசு கூறிவந்தது, ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க மார்ச் 31, 2023 தான் கடைசி தேதி என்று அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30, 2023 வரை அரசு நீட்டித்துள்ளது.  பான்-ஆதார் இணைப்பை செய்ய தவறியவர்களின் பான் செயலிழந்தால், அந்த நபர் பான் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை அந்த நபர் சந்திக்க நேரிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தபால் துறை சிறு சேமிப்பில் முதலீடு செய்ய விதி மாற்றம்... என்ன தெரியுமா?


பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு அளிக்கப்பட்ட பிரிவில் வராத அனைத்து பான் கார்டு வைத்திருப்பவர்களும், 30.06.2023-க்குள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் என்று வருமான வரித் துறையும் வரி செலுத்துவோருக்கு தெரிவித்துள்ளது.  சிபிடிடி வெளியிட்ட அறிக்கையின்படி, "ஒரு நபரின் நிரந்தரக் கணக்கு எண் செயலிழந்து விட்டால் சட்டத்தின் விதிகளின்படி வழக்கு போடப்படும். மேலும் நிரந்தர கணக்கு எண்ணை வழங்காமல், தெரிவிக்காமல் அல்லது மேற்கோள் காட்டாமல் இருப்பதற்காக சட்டத்தின் கீழ் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும்,” என்று கூறியுள்ளது.  பான் (நிரந்தர கணக்கு எண்) என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட தனித்துவமான 10 இலக்க எண்ணெழுத்து அடையாள அட்டையாகும்.  ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (யூஐடிஏஐ) வழங்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் ஆகும்.  பல காரணங்களுக்காக இந்தியாவில் வரி செலுத்துவோருக்கு பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ ​​மேலும் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கான தேதியை ஜூன் 26, 2023 வரை நீட்டித்துள்ளது, முன்னர் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே 3 ஆக இருந்தது.  ஒரு பெரிய வாய்ப்பை வழங்குவதற்கும், தகுதியுள்ள நபர்கள் அனைவரும் தங்கள் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.  கால அவகாசம் கோரி பல்வேறு தரப்பிலிருந்தும் பல கோரிக்கைகள் வந்திருப்பதுடன், ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் மற்றும் அவர்களது சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை அனுதாபத்துடன் பரிசீலித்து இது முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது.  கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதியன்று உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வூதியம் பெறுவோர்/உறுப்பினர்களிடமிருந்து விருப்பம்/கூட்டு விருப்பத்தேர்வு சரிபார்ப்புக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு செய்துள்ளது.


மேலும் படிக்க | Post Office Scheme: அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் TDS கழிக்கப்படாது! யார் யாருக்கு பயன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ