பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை நேர்பாதையில் வழி நடத்த இந்த செயல்கள் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவும். பள்ளி செல்லும் செல்லும் பிள்ளைகள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டிய அடிப்படை செயல்கள் என்னவென்று இங்குப் பார்க்கலாம்.
உங்கள் பிள்ளைகள் பள்ளிகளில் சிறந்து விளங்க இந்த விஷயங்களைப் பெற்றோர்கள் பின்பற்றினால் நிச்சயம் பிள்ளைகள் பள்ளியில் சிறப்பாகப் படிக்கவும், திறமையை வளர்க்கவும் மற்றும் ஒழுக்கத்துடன் இருக்கவும் இந்த வழிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் பிள்ளைகளுக்கு இந்த அடிப்படை செயல்கள் மற்றும் பழக்கங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். மேலும் இதன் முழு விவரம் இங்குப் படிக்கவும்.
பிள்ளைகளுக்குச் சத்தான உணவு, தூக்கம், உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து இவற்றைப் பொறுத்துத்தான் பிள்ளைகள் புத்துணர்வுடன் இருக்க முடியும். கவனம் செலுத்த முடியும். பிள்ளைகள் பள்ளியில் ஆரோக்கியமாகவும் மற்றும் செழிப்பாகவும் இருப்பதற்கு போதுமான தூக்கம் மிகவும் முக்கியமானது.
குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரம் செலவிட வேண்டும். குழந்தைகள் பள்ளி முடிந்து வந்ததும் அவர்கள் மனம் குஷியாகும்படி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவைச் சமைத்து கொடுங்கள், பிள்ளைகளை வெளியில் அழைத்துச் சென்று உல அறிவை வளர்க்க நீங்களும் ஒரு ஆசானாய் விளங்க வேண்டும்.
ஊடகத்தின் பயன்பாடு குறித்தும் மற்றும் அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கூற வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் செல்போன்கள் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கொடுப்பதை நிறுத்த வேண்டும். புத்தக பழகத்தை அதிகரிக்க வேண்டும்.
இனவெறி, வெறுப்பு அல்லது கொடுமைப்படுத்துதல் காரணமாக சில குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பிடிக்காது. பெற்றோர்கள் பெரியவரின் உதவியைப் பெற அவர்களை ஊக்குவிக்க வேண்டும். சக மனிதர்களை மரியாதையுடன் நடத்துவதன் மதிப்பு குறித்து எடுத்துக்கூற வேண்டும்.
குழந்தைகள் மனநல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். குழந்தைகளுடன் ஒன்றாக நடப்பது போன்ற குடும்ப நடைமுறைகள் மேற்கொள்ளவேண்டும். குழந்தைகளுக்கு உணவு மற்றும் சுய பாதுகாப்பு முன்னுரிமை அளிக்கப் பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும். பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளிடம் பேசுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.
உங்கள் குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் நோய்த்தடுப்பு மருந்துகள் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இதனை தொடர்ந்து கவனித்து வந்தால் அவர்கள் பள்ளியில் ஆரோக்கியமாக இருக்க முடியும், மேலும் வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசி மற்றும் முக்கியமான தடுப்பூசிகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கேட்டுக் கடைப்பிடிக்க வேண்டும்.
பிள்ளைகளை இரவில் நேரத்துடன் உணவுக் கொடுத்துத் தூங்க வைக்க வேண்டும். போதுமான தூக்கம் இல்லையென்றால் நினைவாற்றல், செறிமானப்பிரச்சனை, படைப்பாற்றல் மற்றும் கற்றல் ஆகியவை குழந்தைகளைப் பாதிக்கும். குழந்தைகளுக்கு உண்மையில், தூக்கம் இல்லையென்றால் குறைந்த கல்வி செயல்திறன், பள்ளி வருகை தாமதம் உள்ளிட்ட ஒழுக்கப் பண்புகள் பாதிக்கும்
பெற்றோர்கள் குழந்தையை மேலும் ஆரோக்கியமாக வைக்க விரும்பினால் நீங்கள் குழந்தை மருத்துவரை அணுகலாம். அல்லது உங்கள் குழந்தைகளின் பள்ளிக்கு சென்று அசிரியரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.