இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் இந்திய குடிமகன்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.  பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது, இது குடிமகன்களின் முக்கியமான அடையாள ஆவணமாக இருந்து வருகிறது.  இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு தனிநபரும், ஆதார் எண்ணைப் பெற தானாக முன்வந்து பதிவு செய்யலாம்.  இந்த 12 இலக்க ரகசிய எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையானது பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை அடிப்படையிலான தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை வழங்கும் உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் அடையாள திட்டமாகும்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் 30-ம் தேதி நிலவரப்படி கிட்டத்தட்ட 135.1071 கோடி ஆதார் எண்களை வழங்கியுள்ளது மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் கார்டுகளின் விவரங்களைப் அப்டேட் செய்யுமாறு மக்களை அரசு வலியுறுத்தியுள்ளது.  கடந்த சனிக்கிழமையன்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் வழங்கப்பட்ட மற்றும் இந்த ஆண்டுகளில் ஆதாரை அப்டேட் செய்யாத மக்கள் தங்கள் ஆதார் அட்டையை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். தற்போதைய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுகளுடன் தங்களுடைய ஆதார்களை அப்டேட் செய்துகொள்வது மக்களுக்கு நல்லது" என்று கூறியுள்ளது.  ஆன்லைன் மூலமாக அல்லது அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு செல்வதன் மூலம் உங்கள் ஆதார் அட்டையை அப்டேட் செய்துகொள்ளலாம்.



மேலும் படிக்க | குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியான அப்டேட்!..எல்பிஜி விலை விரைவில் குறையும்


1) அதிகாரபூர்வ தளமான uidai.gov.in-க்கு செல்ல வேண்டும்.


2) இப்போது 'எனது ஆதார்' என்கிற ஆப்ஷனின் கீழ், 'அப்டேட் டெமாக்ரபிக்ஸ் டேட்டா அண்ட் செக் ஸ்டேட்டஸ்' என்பதை தேர்ந்தெடுக்கவும்.


3) பிறகு https://myaadhaar.uidai.gov.in/ என்கிற பக்கத்திற்கு செல்வீர்கள், இதில் நீங்கள் லாக் இன் செய்யவேண்டும்.


4) அதில் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, ஓடிபி செயல்முறையை தேர்வு செய்ததும் உங்கள் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.


5) இப்போது 'அப்டேட் ஆதார் ஆன்லைன்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


6) அதிலுள்ள வழிமுறைகளைப் படித்து, 'ப்ரொசீட் டூ ஆதார் அப்டேட்' என்பதைக் கிளிக் செய்யவும்.


7) நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் டேட்டாவை தேர்ந்தெடுக்கவும், ஆதார் அட்டையில் அப்டேட் செய்யவேண்டிய முகவரிக்கான ஆதாரத்தையும் நீங்கள் பதிவேற்ற வேண்டும்.


8) நீங்கள் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.


9) இந்த ஆதாரை அப்டேட் செய்யும் செயல்முறைக்கு நீங்கள் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | இதை செய்யாவிட்டால் பான் கார்டு அம்போ... உடனே கவனிங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ