கொரோனா முழு அடைப்புக்கு மத்தியில் விவசாயிகளுக்கான நிவாரண நிதியின் முதல் தவனையினை ஆந்திரா அரசு வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID-19 தொற்றுநோயால் உருவாகியுள்ள நிதி நெருக்கடி மற்றும் அவசரகால சூழ்நிலைக்கு மத்தியில் ஆந்திரா விவசாயிகளுக்கு, YSR ஜெயன் மோகன் ரெட்டி அரசாங்கம் YSR ரைத்து பரோசா-PM கிசான் திட்டத்தின் முதல் தவணையை மே 15 அன்று விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


YSR ரைத்து பரோசா-PM கிசான் திட்டத்தின் மூலம் சுமார் 49 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள், இதன் கீழ் முதல் தவணை காரீஃப் விதைப்பு பருவத்திற்கு முன்னதாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அரசு தரப்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, விவசாயிகளுக்கு இந்த நிதி அளிக்கப்பட இருக்கிறது. மூன்று கட்டங்களாக மொத்தம் 13,500 ரூபாய் அளிக்கப்படும் இந்த திட்டதின் முதல் கட்டம் மே 15 வரை ரூ.7,500, இரண்டாம் கட்டமாக அக்டோபரில் ரூ.4,000, மூன்றாம் கட்டமாக சங்கராந்திக்கு ரூ.2,000 பிரித்து அளிக்கப்படும்.


ஏப்ரல் மாதத்தில் விவசாயிகளின் கணக்குகளில் மாநில அரசு ஏற்கனவே ரூ.2,000 வரவு வைத்துள்ளது, எனவே மீதமுள்ள ரூ.5,500 வெள்ளிக்கிழமை மாற்றப்படும். SC, ST, BC மற்றும் சிறுபான்மையினரைச் சேர்ந்த குத்தகைதாரர் விவசாயிகளுக்கும், விவசாய ஆஸ்தி மற்றும் வன நிலங்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.


YS ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலுக்கு முன்னர் தனது பாதயாத்திரையின் போது அளித்த ஒன்பது வாக்குறுதிகளில் (நவரத்னாலு) ரைத்து பரோசாவும் ஒன்றாகும். 2019-20 நிதியாண்டில், மூன்று தவணைகளையும் செலுத்தி மாநில அரசு ரைத்து பரோசா-PM கிசான் திட்டத்திற்கு ரூ.6,534 கோடியை செலவிட்டது குறிப்பிடத்தக்கது.