RIL: ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா: மகன் ஆகாஷ் தலைவரானார்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதிய சேர்மனாகிறார் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி. தந்தையின் ராஜினாமாவால் மகனுக்கு பதவி கிடைக்கிறது
புதுடெல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) நிறுவனத்தின் புதிய சேர்மனாகிறார் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி.
ஜூன் 28 அன்று செய்யப்பட்ட ஒழுங்குமுறை தாக்கல் படி, எண்ணெய் முதல் சில்லறை வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் வாரியம், தனது புதிய தலைவராக அகாஷ் அம்பானியை தேர்ந்தெடுத்திருப்பதாக அறிவித்தது.
ஜியோவின் குழுவில் RIL CEO முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி 2014 இல் இணைந்தார். ஜியோவின் இயக்குநர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்ததையும், அந்த பதவிக்கு அகாஷ் நியமிக்கப்பட்டதையும் நிறுவனம் வெளிப்படையாக அறிவித்தது.
ஜூன் 27, 2022 அன்று நடந்த கூட்டத்தில், நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து திரு. முகேஷ் டி. அம்பானி ராஜினாமா செய்ததை இயக்குநர்கள் குழு குறிப்பிட்டதாக ஜியோ பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, "நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக, நிர்வாகமற்ற இயக்குநரான ஆகாஷ் எம். அம்பானியின் பரிந்துரையை வாரியம் ஏற்றுக்கொண்டது" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஸ்கை குரூஸ் விமான ஹோட்டல்
ஜூன் 27, 2022 முதல் ஐந்தாண்டு காலத்திற்கு, ரமீந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கே.வி. சௌத்ரி ஆகியோரை கூடுதல் இயக்குநர்களாக நியமிக்கவும், ஒவ்வொருவரும் ஒரு சுயேச்சை இயக்குனராக நியமிக்கப்படுவதற்கு குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் நிறுவனம் மேலும் கூறியது.
ஜியோவின் நிர்வாக இயக்குநராக பங்கஜ் மோகன் பவாரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டாலும், முடிவெடுப்பதற்கு முன் பங்குதாரர்களின் ஒப்புதல் தேவைப்படும்.
கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முதல் இடத்தைப் பிடித்த ஜியோ, மூன்றாம் காலாண்டில் ரூ.3,615 கோடியிலிருந்து, ரூ.4,173 கோடியாக நிகர லாபம் ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும் போது, செயல்பாடுகள் மூலம் தனி வருவாய் 20.4 சதவீதம் அதிகரித்து, ரூ.20,901 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கிரிப்டோவில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை; காரணத்தை விளக்கும் பில் கேட்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR