புதுடில்லி: தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளின் (PSBs) இணைப்பு ஏற்கனவே நடந்துவிட்டது. 2021 ஏப்ரல் 1 முதல் இந்த வங்கிகளின் காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புக்குகள் செல்லாது என்பதை இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:


1) தற்போதுள்ள ஓபிசி, யுனைடெட் பாங் ஆஃப் இந்தியா, விஜயா வங்கி, அலகாபாத் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்தரா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றின் காசோலை புத்தகங்கள் ஏப்ரல் 1 முதல் செல்லாது. இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களது தற்போதைய காசோலை புத்தகங்கள் (Cheque Book) மற்றும் பாஸ் புக்குகளை மார்ச் 31 வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.


2) தற்போதுள்ள காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புக்குகள் செல்லாமல் போன பிறகு, வாடிக்கையாளர்களின் கணக்கு எண் (Account Number), ஐ.எஃப்.எஸ்.சி (IFSC), எம்.ஐ.சி.ஆர் குறியீடு (MICR Code), கிளை முகவரி (Branch Address), காசோலை புத்தகம் (Cheque Book), பாஸ் புக் (Passbook) ஆகியவை மாற்றத்திற்கு உட்படும்.


3) சிண்டிகேட் வங்கி மற்றும் கனரா வங்கியின் தற்போதைய காசோலை புத்தகம் மற்றும் பாஸ் புக் ஆகியவற்றை 2021 ஜூன் 30 வரை பயன்படுத்த முடியும்.


ALSO READ: சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து சூப்பரா சம்பாதிக்க SBI Gold monetization scheme: முழு விவரம் உள்ளே


4) இந்த வங்கிகளில் (Banks) கணக்கு வைத்திருப்பவர்கள் எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் வழியாகவும் புதுப்பிப்புகளைப் பெறலாம். தங்களுடைய மொபைல் எண், முகவரி, நாமினி விவரங்கள் ஆகியவற்றை அவர்கள் புதுப்பிக்க வெண்டும்.


5) மேலும், புதிய கணக்கு விவரங்களை பல்வேறு முதலீடுகள் மற்றும் மியூசுவல் ஃபண்டுகள், வர்த்தக கணக்குகள், ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள், எஃப்.டி / ஆர்.டி மற்றும் பி.எஃப் கணக்கு உள்ளிட்ட நிதி கணக்குகளில் புதுப்பிக்க மறக்காதீர்கள்.


வங்கிகளின் இணைப்பு விவரங்கள்


தேனா மற்றும் விஜயா வங்கி ஏப்ரல் 1, 2019 அன்று பாங்க் ஆப் பரோடாவுடன் இணைந்தன. ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) உடன் இணைக்கப்பட்டன. சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது. ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்தன. அலகாபாத் வங்கியின் இணைப்பு இந்தியன் வங்கியுடன் நடந்தது.


ALSO READ: EPFO அளித்த பெரிய நிவாரணம்: உங்கள் விவரங்களை நீங்களே அப்டேட் செய்யலாம், விவரம் உள்ளே


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR