Bank Holidays in March 2023: இந்திய ரிசர்வ் வங்கியானது ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை முன்கூட்டியே தெரிவித்து விடுகிறது.  இதனை மக்கள் சரிபார்த்து கொள்வதன் மூலம் வங்கி விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று நேரத்தை வீணடிக்க வேண்டிய தேவையில்லை.  ரிசர்வ் வங்கியின் வங்கி விடுமுறைப் பட்டியலின்படி, 2023ம் ஆண்டு ஹோலி பண்டிகையன்று அதாவது மார்ச் 8ம் தேதியன்று வங்கிகள் மூடப்படும்.  அதுமட்டுமின்றி, சில மாநிலங்களில் ஹோலிகா தஹான் பண்டிகை காரணமாக மார்ச் 7, 2023 (செவ்வாய்கிழமை) அன்று வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.  இது தவிர மார்ச் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட 12 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஹோலி, சைத்ரா நவராத்திரி, ராம நவமி போன்ற பல பண்டிகைகள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆதார் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா? ஆன்லைனில் எளிதாக தெரிந்து கொள்ளலாம்


மார்ச் 2023, வங்கி விடுமுறை நாட்கள்:


1) மார்ச் 03, 2023 - ஐஸ்வாலில் சப்சார் கூட்
2) மார்ச் 05, 2023 - ஞாயிறு விடுமுறை
3) மார்ச் 07, 2023 - ஹோலி/ஹோலிகா தஹன்/துலேந்தி/டோல் ஜாத்ரா/யோசங்
4) மார்ச் 08, 2023 - துலேட்டி/டோல் ஜாத்ரா/ஹோலி
5) மார்ச் 09, 2023 - பாட்னாவில் ஹோலி
6) மார்ச் 11, 2023 - இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை
7) மார்ச் 12, 2023 - ஞாயிறு விடுமுறை
8) மார்ச் 19, 2023 - ஞாயிறு விடுமுறை
9) மார்ச் 22, 2023 - குடி பத்வா/உகாதி/பீகார் நாள்/முதல் நவராத்திரி/தெலுங்கு புத்தாண்டு
10) மார்ச் 25, 2023 - நான்காவது சனிக்கிழமை
11) மார்ச் 26, 2023 - ஞாயிறு விடுமுறை
12) மார்ச் 30, 2023 - ராம நவமி


சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகள்:


1) மார்ச் 5, 2023: ஞாயிற்றுக்கிழமை 
2) மார்ச் 11, 2023: சனிக்கிழமை
3) மார்ச் 12, 2023: ஞாயிற்றுக்கிழமை 
4) மார்ச் 19, 2023: ஞாயிற்றுக்கிழமை 
5) மார்ச் 25, 2023: சனிக்கிழமை
6) மார்ச் 26, 2023: ஞாயிற்றுக்கிழமை


மேலும் படிக்க | ஆதார் - பான் இணைப்பு: லட்சக்கணக்கானோருக்கு விலக்கு அளித்தது மத்திய அரசு..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ